Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts
வெறுமைக்குள் மயல் கொள்ளும் கனவுவெளி
நிழல் இன்மையால்
விலகிச் சென்ற மேகங்கள்
சூரியனை மறைத்து
தமக்கு அந்நியமான
நிழல்களை
உருவாகிக் கொண்டன
புலராப் பொழுதொன்றில்
சூரியனுக்குப் பயந்து
பூக்களுக்குள் ஒளிந்து கொண்டது
மனம்
காலைப் பனித்துளியில்
வண்டுகளின் ரீங்காரத்தில்
மகரந்தங்களை இழந்தபடி
கழியும் காலம்
நிழற்ற
ஒரு புல்வெளியைப்போல
சி.ரமேஷ்
உடையும் முகக் கண்ணாடி
மனித முகத்திரைகள் கிழிக்கப்பட்ட
கனவு வெளிக்குள்
உறவின் இழைகள் அற
எவ்வித பிரக்ஞையுமற்று
வதை சூழ் ஆழியாய்
வாழ்க்கை வியாபித்தது
விகற்பங்கள் முகமாய்
சமைக்கும் மனிதா; மத்தியில்
எல்லைக் கோடுகளுக்குள்
என் உயிh;ப்பின் இழை அற
புனிதா;களின்
வீணில் படிந்த எச்சில் வாh;த்தைகள்
என்னைக் கழுவிச் செல்கின்றன.
உதிரும் என் எச்சங்களை
ஒவ்வொன்றாய் பொறுக்கியெடுத்து
எனக்குள் உயிரூட்டிக் கொள்கிறேன்
நாளைய சிறுபொழுதொன்றிலாவது
ஒரு கணமேனும்
நான் வானவில்லாய்
தோன்றி மறைவதற்கு
கடவுளின் நாவிலிருந்து அவர்கள் எழுதிச் சென்றார்கள்
கனகரமேஸ்
கிழிபடும் இதழ்களுக்கிடையில்
சிக்கிக் கிடந்தது வார்த்தை
துக்கித்த இருளைப்
பிரவகிக்கும் நோக்குடன்
அதன் விழிகளில் துலங்கும்
கூர்மை
என்னை வேட்டையாடத்
தயாராகவே இருந்தது.
வன்மம் குடிகொள்ள
குதறும் வார்த்தைகளை
கூரிய அம்பாக்கி
சமருக்குத் தயாராகும் கணத்தில்
கடவுளின் நாவிலிருந்து
அவர்கள் எழுதிச் சென்றார்கள்
நான் ஏலவே கொல்லப்பட்டவன்
என்பதை
Subscribe to:
Posts (Atom)
.jpg)
