125x125 Ads

வெறுமைக்குள் மயல் கொள்ளும் கனவுவெளி



நிழல் இன்மையால் 
விலகிச் சென்ற மேகங்கள்
சூரியனை மறைத்து
தமக்கு அந்நியமான
நிழல்களை
உருவாகிக் கொண்டன
புலராப் பொழுதொன்றில்
சூரியனுக்குப் பயந்து
பூக்களுக்குள் ஒளிந்து கொண்டது
மனம்
காலைப் பனித்துளியில்
வண்டுகளின் ரீங்காரத்தில்
மகரந்தங்களை இழந்தபடி
கழியும் காலம்
நிழற்ற
ஒரு புல்வெளியைப்போல

சி.ரமேஷ்

0 comments:

Post a Comment

 

Copyright © 2010 • அகமுகம் • Design by Dzignine