125x125 Ads

நவீன கவிதை சொல்லாக்கப் பிற்புலமும் அதன் வளர்ச்சியும்


அறிமுகக் குறிப்புக்கள்
சி.ரமேஷ்
நவீனம் என்னும் சொல் புதியதுபுதுமைமறுமலர்ச்சி என்னும் பொருண்மையில் கட்ட மைக்கப்பட்டு தமிழில் வழங்கி வரும் சொல்லாகும். இவற்றிடையே சிற்சில நுண்ணிய வேறு பாடுகள் இருப்பினும் புதுமை” என்ற அம்சமே பொதுவானதாய் இருப்பது கவனிக்கத்தக் கது. நவீனம் என்னும் சொல்லை க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி புதிய மாற்றங்களுக் கும் தேவைகளுக்கும் ஏற்ற முறைகளையும் தன்மைகளையும் கொண்டமைவது” என வரையறுக்கும். எனவே நவீனம் என்றால் வழிவழி வந்த மரபிலிருந்து மாறுபட்டு புதுமையைச் சார்ந்து நிற்றல் அல்லது புதுமையை நாடிச் செல்லல் எனப் பிறிதொரு வகையில் பொருள் கொள்ளலாம்.
நவீன கவிதையுருவாக்கத்தில் நவீனத்துவத்தின் பண்புகள் இன்றியமையாதவையாகும். ஆங்கிலத்தில் னிலிderஐஷ்மிதீ என அழைக்கப்படும் நவீனத்துவம் என்பது சமூகஅரசியல்பொருளாதாரப் பண்பாட்டு அம்சங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கும் ஒரு வளர்ச்சி நிலை யைச் சுட்டுகின்றது. கிறிஸ்தவ இறையியலுக்கூடாக அடையாளம் காணப்பட்ட நவீனத்துவம் ஆரம்பத்தில் ஜெர்மனியில் டி.எம்.ஸ்ட்ராஸ்பிரின்ஸில் ஏர்னஸ்ட்ரெனான்முதலானோராலும் இங்கிலாந்தில் பெடரிக்ஹேன் ஹ்யூகல்இத்தாலியில் அன்டானியோ போலஸ்டோ ரோமலோ போன்றோராலும் வளர்த்தெடுக்கப்பட்டது. ஆக்ஸ்போர்ட் இயக்கத்தை நிறுவிய பிரிட்டிஸ் மதப் பேச்சாளரான ஜான்நியூமான் மூலம் இலக்கிய உலகில் நுழைந்தது.
மமபழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகையி னானேடுடு என்னும் கூற்றுக்கமைய மரபுத் தளையிலிருந்து விடுபட்டு யாப்பு விடுதலையை நோக்காகக் கொண்ட கட்டற்ற கவிதைகள் 19ஆம் நூற்றாண்டில் தோன்றத் தொடங்கின. புதிய உள்ளடக்கம்புதிய வெளிப் பாட்டுமுறைபுதிய வடிவமாற்றம் என்னும் அடிப்படையில் இயங்கிய இக் கவிதையின் தோற்றுவாயாக வோல்ட் விட்மன்விதந்துரைக்கப்படுகிறார். பகுதி பகுதியாக விட்மனால் எழுதி வெளியிடப்பட்ட கவிதைகள் 1855இல் புல்லின் இலைகள் என்னும் பெயரில் முழுத்தொகுப்பாக வெளிவந்தது. வார்த்தைகளுக்குள் சிக்குறாது ஓசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழு தப்பட்ட இவரின் கவிதைகள் தெய்வீகம்வேதாந்தம்அரசியல்பெண் விடுதலைஇனத்துவம்,தேசியம்நாட்டுப்பற்று என பல்வேறு தளங்களில் இயங்குபவை. மனித வாழ்வியலின் இருப்பை உயிர்த்துடிப்புடன் பதிவு செய்யும் விட்மனின் கவிதைகள் யாப்பையும் எதுகை மோனைகளையும் கைவிட்டு ஒலிநயமிக்க சொல்லமைவுகளுக்கூடாக நிலைபெறுகின்றன.
இருபதாம் நூற்றாண்டின் கவிதைச் சொற்களையும் கவிதை வடிவங்களையும் புரட்சிகர மாக மாறுதலுக்கு உள்ளாக்கிய பவுண்ட் நவீன தமிழ்க்கவிஞர்களிடையே அதீத தாக்கம் செலுத்திய வோல்ட்விட்மனை நிராகரிப்பார். அருவருப்பூட்டும் அதீதமாய் குமட்டும் மாத்திரை என விட்மனின் கவிதைகளை இகழும் பவுண்ட் விட்மனை செய்நேர்த்திமிக்க தொழில்நுட்ப னாகக் கருதவில்லை. ஆயினும் வழிவழி வந்த மரபு இலக்கியத்திலிருந்து விலகி கவிதை யைக் கட்டற்ற கவிதையாகக் கண்டவர் என்னும் வகையில் விட்மனின் பங்கு நவீன கவிதை யில் இன்றியமையாததாக அமைகிறது.
பிரெஞ்சில் புதிய செவ்வியல் இயக்கத்தின் (ஹிeழ உயிழிவிவிஷ்உ துலிஸeதுeஐமி) பின் புத்துணர்வு இயக்கம் வளர்ந்ததன்போது வில்லியம்பிளேக்மேத்யூஆர்னால்டு முதலானோரால் கட்டற்ற கவிதை தொடர்பாக வடிவமைப்பில் பல்வேறு சோதனைகள் நடாத்தப்பட்டது. இதன் விளை வாக செய்யுள் தளையிலிருந்து விடுபட்டு உரைநடையில் அமைந்த எளிமையும்நெகிழ்ச்சி யும் மிக்க கட்டற்ற கவிதைகள் பிறக்கத் தொடங்கின. சமூகப் பொருளாதார மாறுதலுக்கு ஏற்ப யதார்த்த வாழ்வின் அனுபவங்களை உள்வாங்கி உணர்வுத்தளத்தில் ஓசைநயத்துடன் புதுப் பொலிவுகொண்டு வெளிவந்த இக்கவிதைகளைசெய்யுள் என்ற சொல்லும் விடுதலை என்ற சொல்லும் (ஸிஷ்ணுerழிமிஷ்லிஐ) இணையும் வண்ணம் மவிடுதலைச் செய்யுள்டு என்று சுருக்கமாக அழைத்தனர். அதனைத் தமிழில் மவிடுநிலைப்பாடு என்றே அழைத்தனர். கவிதையின் கருப் பொருள் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்னும் காலகட்டத்தில்அன்றாட வாழ்வியலின் சாதாரண நடைமுறைகளைக் கவிதையின் கருப்பொருளாகக் கொண்டு பாடிநவீன கவிதை யின் ஆதார சுருதியாக இருந்தவர் சார்ல் போதலேர் ஆவார். இசையயாழுங்கோ எதுகையோ எதுவுமற்று ஆழ்ந்த பொருட்பெறுமானமுள்ள கலை நுணுக்கம் கொண்ட கவிதைகளை ஆக் கிய போதலேர் பிரான்சின் நவீன கவிதையியலின் தந்தையாகக் கருதப்படுபவர். போதலேர் கவிதையுடன் ஒத்தியங்கும் ஆர்தர் ரெம்போ நவீன கவிதைத் துறையின் புரட்சியை தோற்று வித்தவர். கவிதையில் பிரமிப்பு ஊட்டும் மாற்றங்களை ஏற்படுத்திய ரெம்போ கவிதை இலக் கணங்களை மீறி புறக்காட்சிப் படிமங்களுடாகக் கவிதைகளை வடித்தார். பிரெஞ்சு கவிதை இலக்கியத்தில் போதலேர் ரெம்போவை போன்று வெர்லேன்ஸ்டீபன் மல்லார்மே போன்றோ ரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
கடந்த நூற்றாண்டின் மிகச் சக்தி வாய்ந்த இயக்கமான நவீனத்துவ இயக்கத்துக்கு தாமஸ் ஸ்டெர்ன்ஸ்எலியட் அளித்த பங்களிப்பு மிக முக் கியமானது. அருவக் கவிஞர் என அழைக்கப்படும் ரி.எஸ். எலியட் அமெரிக்க கவிஞரான எஸ்ராபவுண்டுடன் இணைந்து ஒரு புத்தம் புதிய கவிதை முறையைத் தொடங்கி வைத்தார். கவிஞனை மஒரு தொழில்நுட்பன்டு எனக் கூறும் எலியட் மகவிதையானது மதத் திற்கோ கருத்துருவங்களுக்கோ கருவியாவதில்லை. கவிதை ஒரு பண்படுத்தப்பட்ட மொழியில் ஏதாவது ஒரு நித்திய மானிட உணர்ச்சித் தூண்டலை வெளிப்படுத்துகிறதுடு என்பார். வாழ்வின் சிக்கலான அனுப வங்களைத் தினசரி மொழியில் வெளிப்படுத்தும் எலியட்டின் கவிதைகள் பூடகமான உள் முகத்தன்மை கொண்டவை. மேற்கோள்கள்மறைமுகக் குறிப்பீடுகள்வேற்றுமொழி இலக்கி யங்களின் பகுதிகளைப் பயன்படுத்தல் என விரியும் எலியட்டின் கவிதை உத்திகள்சாதாரண வாசகன் கவிதையின் மையத்தை நோக்கி நகர்வதற்குத் தடையாக அமைகிறது. இதனால் கடினமான கவிதைகளை எழுதுபவர் என்றும் புரியாமைக்கு முதலிடம் தருபவர் என்றும் எலி யட் விமர்சகரால் குற்றம் சாட்டப்படுகிறார். 1915ஆம் ஆண்டு எஸ்ரா பவுண்ட்டுடன் கொண்ட தொடர்பினால் எலியட்டின் கவிதைகள் இறுக்கமடைந்தன. செறிவாக்கம் கொண்ட செம்மை யான கவிதைகளை எலியட்டால் இக்காலப் பகுதியில் படைக்க முடிந்தது. இதற்குத் தக்க சான் றாக பாழ்நிலம் என்னும் கவிதையைக் கூறலாம். பிரக்ஞைபூர்வமாகக் கலாச் சாரம் தொடர்பான வரலாற்றுச் சூழ்நிலையில் மையம் கொள்ளும் இக்கவிதைநவீனத்துவ கவிதையாக்கத்தின் முனைப்புப் பெற்ற வடிவமாக விளங்குகிறது.
புயற் பறவையாகவும் ஆளுமைமிக்க சிருஷ்டி கர்த்தாவாகவும் அறியப்படும் எஸ்ரா லுமிஸ் பவுண்ட் உரைநடை வரிக்கும் இசைக்குமிடையேயுள்ள தொடர்பு பற்றிய கருத்தாக் களையும் உருவாக்கினார். ஐரிஸ் கவிஞரான யேட்ஸின் கவிதைகளால் அதிகம் ஈர்க்கப்பட்ட பவுண்ட் கவிதையில் காணப்பட்ட கருத்துறுதியற்ற புனை வியக் கொள்கையை எதிர்த்தார். நவீன கவிதை இயங்கியலில் செல்வாக் குச் செலுத்திய மஇமேஜிசம்டுத மவோர்ட்டிசம்டு ஆகிய இயக்கங்க ளிலும் முக்கிய பங்கு வகித்தவரான பவுண்ட் இலக்கிய விமர்ச கரால் மவோர்ட்டிசிஸ்ட்டு என்றும் மஇமேஜிஸ்ட்டு என்றும் அழைக் கப்பட்டார். இது மாத்திர மன்றி இலண்டனில் வாழ்ந்த காலத் தில் அமெரிக்க அறிஞர் எர்னெஸ்ட் ஃபென்னலேசா (சிreவிமி ய்eஐஐeயிலிவிழி)வின் கையயழுத்துப்படிகளை ஆய்ந்து சீன-ஜப்பா னியக் கவிதை களையும் நோ நாடகங்களையும் ஆங்கி லத்தில் மொழியாக்கம் செய்து பதிப்பித்தார். ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளையும் மேலைத்தேய நாடுகளில் அறிமுகம் செய்த பவுண்ட்வீ.சி.ஹ்யூ முடன் இணைந்து படிமவியல் இயக்கத்தையும் ஸ்தாபித்து வழிநடாத்தினார். ஆங்கிலப் புதுக் கவிதையையும் பிரெஞ்சு மடக்குப் பாடல்களையும் உள்வாங்கிக் கொண்ட பவுண்ட்சிக்கலான வடிவமைப்புடைய செறிவும் அடர்த்தியும் கொண்ட நீண்ட கவிதைகளைப் படைத்தார். இலக்கிய ஆர்வலராகவும் ஆழ்ந்த சிந்தனையாளராகவும் விளங்கிய எஸ்ரா பவுண்ட் கவிதையின் இயங்கு தன்மையை அடிப்படையாகக் கொண்டு நவீன கவிதையை
1. Logopoeia :ஏறத்தாழ கருத்துருவாக்களின் கவிதை:
மிகச் சிறந்த வெளிப்பாட்டைக் கொண்டது
2. Phanopoeia: படிமங்களின் கவிதை
3. Melopoeia :சக்தியூட்டப்பட்ட வார்த்தைகளுடன் அவற்றின்
எளிமையான அர்த்தத்திற்கு மேல்
ஓரளவு இசைத்தன்மை கொண்ட கவிதை.
என மூன்றாக வகைப்படுத்துவார். பொதுவாக இருபதாம் நூற்றாண்டுக் கவிதையின் இயங்கு நிலையை அறிந்து கொள்வதற்கு இந்தப் பகுப்புநிலை வகை செய்கிறது. நவீன கவிதையின் மொழியைத் தெளிவாக்கிக் கலாச்சாரத்தை முன்னிறுத்தி அறிவார்ந்த தளத்தில் இயங்கிய பவுண்ட்ஸ்தூலமான படிமங்களுக்கூடான கருத்துருவாக்கங்களையும் சிக்கன மான சொற்களுக்கூடான வெளிப்பாட்டு முறைமையையும் கவிதையின்வளர்ச்சி ஒழுங்கில் முரணின்றிப் பொருந்தும் ஓசைமையையும் உருவாக்கி நவீன கவிதையானது செம்மையாக வும் சீர்மையாகவும் இயங்க வழி அமைத்தார்.
இலக்கியப் பயில் பரப்பில் மரபுதேசிய எல்லைகளைக் கடந்து அறிவார்த்த பழங்கலை அழகியலிலிருந்து விடுபட்டு மனித மனத்தின் மாறுதலுக்கமைய புதிய சூழலில் துல்லிய நிகழ் உலகைச் சித்திரிக்கும் நவீனத்துவம்இறைத்துவம்மதநம்பிக்கைகள்,அவ்நம்பிக்கையினூ டாகக் கட்டி எழுப்பப்பட்ட மத நிறுவனங்கள்,அதன் கோட்பாடுகள் ஆகிய அனைத்துக்கும் எதி ராகத் தனிமனித பிரக்ஞையை முன்னிறுத்தியது. நவீனத்துவம் புறவய உலகின் தருக்கமே அகவுலகின் படிமங்களைத் தீர்மானிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. தனிமனித ஆளுமைகள்அதனிருப்புக்கள் பொதுமனம் சார் உளவியல் பிரச்சினைகள்கலாச்சாரப் பிரச்சினைகள் என்பன நவீனத்துவத்தால் அடையாளம் காணப்பட்டு முன்மொழியப்பட்டது. அழகியல் சார்மிகு கற்பனாவாதப் போக்குகளைக் கடுமையாக நிராகரித்தபடி யதார்த்த இருப் பியலை அனுபவம் சார் வாழ்வியலுக்கூடாகப் பட்டவர்த்தனமாகக் காட்சிப்படுத்திய நவீனத்து வம்மனிதசார் நடத்தைகளின் அபத்தங்களையும் தூலநோக்கோடு வெளிப்படுத்தியது. வோல்ட் விட்மன்கலீல்ஜிப்ரான்உமர்கயாம்தாகூர் (கீதாஞ்சலி) ஆகியோரின் கவிதைகள் தமிழில் எளிய மொழிதலுக்கூடாக மொழி பெயர்க்கப்பட்டமை நவீன தமிழ்க் கவிதையின் எழுச்சிக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் மபாரதியும் நவீனத்துவமும்டு என்னும் கட்டுரையில் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்தே இந்தியாவில் நவீனத்துவம் சார்ந்த இயக்கங்கள் செயற் படத் தொடங்கியதாகக் கூறுவார். பிரம்மசமாஜம் (1828), ஆர்யசமாஜம் (1925), இராமகிருஷ் ணமிசன் (1886) இந்து இலக்கியச்சங்கம் (1820), இந்து முற்போக்கு அபிவிருத்திச் சங்கம் முதலான சமய சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் இந்தியப் பண்பாட்டை நவீனப்படுத்த உதவின. இவற்றுடன் ஒன்றிணைந்து இந்திய தேசிய இயக்கமும் அரசியல் சமூகரீதியான புரட்சிகரமான மாற்றங்களுக்கு அடித்தளமிட்டன. இலக்கியத்தைப் பொறுத்தவரை நவீன சிந்தனையாளர்க ளாக விளங்கிய பாரதி உள்ளிட்ட இலக்கிய கர்த்தாக்கள் ஆரம்பத்தில் பழமையைப் போற்று பவர்களாகவேகாணப்பட்டனர். இவர்களின் கவிதைப் புனைவாக்கம் மரபு மாறாது பழமை யில் எளிமையைப் புகுத்திப் புதுமை காணுவதை நோக்காகக் கொண்டதேயன்றி நவீனத்துவ வழி நின்று புரட்சிகரமான மாறுதலுக்கூடாக ஒரு புதிய பிரக் ஞையைக் (ளீலிஐவிஉஷ்லிற்விஐeவிவி) காணுவதாக அமையவில்லை. ஆயினும் கோபாலகிருஸ்ண பாரதியாரின் மநந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள்டு தமிழி லக்கியப் பரப்பில் பாடுபொருளாலும் பாடப்பட்ட முறைமையா லும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. திரிகூடராசப்பக் கவிரா யரைப் பின்பற்றிக் கோபாலகிருஸ்ணபாரதியாரால் கையா ளப்பட்ட சிந்து முதலிய இசைப்பா வடிவங்கள் நவீன தமிழ்க் கவிதையில் அதீத தாக்கம் செலுத்தின.
நிலப்பிரப்புத்துவ முறையிலிருந்து இந்தியச் சமூகம் தீவிர மாற்றத்துக்கு உள்ளாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் பாரம்பரிய மரபுசார் வாழ்க்கைமுறை மாற்றமடைந்து கிராமங் கள் நகரமயமாகும் சூழ்நிலையிலே மனித வாழ்வியல்சார் இயங்கியலுக்கேற்ப இலக்கியமொழி தன்னிறுக்கத்தைத் தளர்த்தியது. இதனால் மரபு வழிபட்ட செய்யுட்களிடம் பெறும் அடைமொழிகளும் அலங்கார மொழிகளும் வழக்கிழக்கப் புளக்கத்திலுள்ள பேச்சுமொழியின்அவசியம் உணரப்பட்டது. இவ்வகையில் இராமலிங்க வள்ளலாரின் பாடல்கள்மயூரம் வேதநாயகம்பிள்ளையின் மசர்வசமய சமரசக் கீர்த்தனைகள்டு என்பன குறிப்பிட்டுக் கூறத் தக்கவை. ஐரோப்பியர் வருகையாலும் ஆங்கிலக் கல்வி முறையாலும் ஏற்பட்ட இம்மாற்றங் கள் உயிர்த்துடிப்புள்ள இலக்கிய ஆக்கங்களுக்கு கால்கோளாக அமைந்தன.
இருபதாம் நூற்றாண்டில் பாரதியின் எழுச்சி நவீன கவிதையின் வியாபித்து எல்லைகளை நிரப்பிக்கொள்ள உதவிற்று. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழ் வழிச் சிந்தனா வுலகில் தாக்கம் செலுத்திய பழமையின் மரபு பாரதியின் ஆரம்பகாலக் கவிதைகளில் விரவிக் காணப்பட்டது. வேதாகம புராணங்களினை முறையாகப் பயின்றமையால் பாரதிக்கிருந்த அநு பவவழி ஞானத்தையும் வள்ளுவன்இளங்கோகம்பன்தாயுமானவர்,பட்டினத்தடிகள்மாணிக்கவாசகர் முதலானோர் மீது கொண்ட ஆழ்ந்த ஈடுபாட்டையும் பாரதியின் கவிவழி கண்டு உணரலாம். மரபுவழி நின்று நெகிழ்ச்சியற்ற செறிவான கவிதைகளைப் பாடிய பாரதி ஆசிரியப்பாவெண்பாவிருத்தப்பா முதலான பாவகைகளையும் கையாண்டார். இவ்வகை யில் மரபுவழிச் சமுதாயத்துடன் இணைந்து ஆறுதல் காணும் முயற்சியாக தோத்திரப் பாடல் கள்புதிய ஆத்திசூடிகீர்த்தனைகள்பாரத மாதா திருப்பள்ளியயழுச்சிகண்ணிஇளசை ஒருபா ஒருபஃது முதலான இலக்கியங்களை தன் முன்னைய காலத்தின் தொடர்ச்சியாகப் படைத்தான். இதனை அடிப்படையாகக் கொண்டே தமிழவன் அவர்கள் மமபாரதிக்கு இருபதாம் நூற்றாண்டு மொழிநடை உருவம் கைவரப் பெறவில்லைடுடு என்பார். பழமையின் இறுக்கமான பிடிக்குள் சிக்குண்ட பாரதி ஆங்கிலக் கல்விவடநாட்டு யாத்திரை,பத்திரிகைத் தொழில் உரை நடையின் எழுச்சிசமூக விழிப்புணர்வு என நிகழ்கால இயங்கியலுக்கூடாகப் புதுமையை நோக்கி நகர்கிறான் இதன் நிமித்தம் மேலைத்தேய கவிதை வடிவங்களான மசொனெட்டு முத லானவற்றைத் தமிழுக்கு அறிமுகம் செய்கிறார். சான்றோருக்கு மாத்திரமன்றி சாதாரண வாசகனுக்கும் தன் கவிதை போய்ச்சேர வேண்டுமென்னும் நோக்கில் யாப்பிலிருந்து விடுபட்டு உரை நடையிலமைந்த வசன கவிதைகளை யாத்தான். எளியபதம்,எளிய நடைஎளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம்பொதுமக்கள் விரும்பும் மெட்டு என்பவற்றின் அடிப்படையில் நவீன வாழ்வியலுக்கேற்ப இருபதாம் நூற்றாண்டுக் கவிதையைச் சாத்தியமாக்குகிறான். மமசுவை புதிது, பொருள் புதிதுவளம் புதிது,சொற்புதிதுசோதிமிக்க நவகவிதைஎந் நாளும் அழியாத மகாகவிதைடுடு என்னும் தன் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் மகாட்சிகள்டு என்ற தலைப்பில் வசன கவிதைகளை எழுதி நவீன கவிதைக்கு வித்திட்டான் வேத காலக் கவிதை களைப் பின்பற்றி இயற்கையை வியந்து பாடும் இக்கவிதைகள் யாப்பைத் துறந்து வசனத்தில் கவிதை எழுத முயன்ற பரிசோதனையாகவே இற்றை வரை கருதப்பட்டு வருகிறது.
பாரதியின் காட்சிகளும் வோல்ட்விட்மனின் வசன கவிதைகளும் ஏற்படுத்திய பாதிப்பால் 1934இல் புதுக் கவிதைகளை எழுதத் தொடங்கிய ந.பிச்சமூர்த்தி வடிவ ரீதியான சோதனை களைத் தமிழ்க் கவிதையில் நிகழ்த்தினார். க.நா.சுப்ரமணியன் போன்றோர் ந.பிச்சமூர்த்தி யின் கவிதைகளை புதுக்கவிதைகளாக அங்கீக ரிக்க மறுத்த சமயத்தில் சி.சு. செல்லப்பாவின் மஊதுபத்திப்புல்டு என்னும் நூல் ந.பிச்சமூர்த்தியைத் தமிழ் போற்றும் புதுமைக் கவிஞனாக நிலை பெறச்செய்தது. இவரைத் தொடர்ந்து கு.ப. ராஜகோபாலன்,வல்லிக் கண்ணன் முதலானோரும் பெரும்பாலான வசன கவிதைகளை ஆக்கினார்கள்.
இக்காலப் பகுதியில் வெளியான மமணிக்கொடிடுமசூறாவளிடு,மகலா மோகினிடு, மகிராம ஊழியன்டு, மசரஸ் வதிடு, மஇலக்கிய வட்டம்டுத மஎழுத்துடுமநடைடுமகசடதபறடு முதலான சஞ்சி கைகள் வசன கவிதைகளை வெளி யிட்டதுடன் புதுக் கவிதை பற்றிய விவாதத்தையும் தொடக்கிவைத்தன. இதில் நவீன கவிதையை சக்தி வாய்ந்த இலக்கிய வடிவமாக உருவாக்கிய பெருமை 1959இல் சி.சு. செல்லப்பாவால் தொடங்கப்பட்ட எழுத்து என்னும் சஞ்சிகையையே சாரும். தருமுசிவராம்,தி.சோ.வேணுகோபாலன்சி.மணிபசுவய்யாநகுலன்,எஸ்.வைத்தீஸ்வரன் முதலான வீரியம்மிக்க நவீன கவிஞர்களை எழுத்தே அறிமுகம் செய்தது. இதனைப் போன்று மநடைடு,மகசடதபறடுமதாமரைடு போன்ற இதழ் களும் நவீன கவிதையைப் புதுப்பொலிவுடன் இயங்கச் செய்தன. நா.காமராசன்மீராசிற்பி,புவியரசுமேத்தாதமிழன்பன்அக்கினி புத்திரன் எனப் பல்வேறு புதுக்கவிஞர்களை தமிழுக் குத் தந்து அணிசெய்த பெருமை மவானம்பாடிடு என்னும் இதழுக்கு உண்டெனினும் செறிவான வீரியமிக்க கவிதைகளை இவ்விதழ் பெருமளவில் பிரசுரிக்கவில்லை. இடதுசாரிச் சிந்தனை யும்தமிழ் மரபறிந்து கவிதை பாடும் புதுமையும் சமுதாயப் பார்வையும் கொண்ட முற்போக் குச் சிந்தனையுமுடைய வானம்பாடிக் கவிஞர்களால் அர்த்தபுஷ்டியுள்ள சொல்லிறுக்கமான கவிதைகளைப் பேரளவில்கூட எழுத முடியவில்லை. ஆயினும் இக்காலத்தில் நவீன வழிப்பட்ட மேனாட்டு மனநிலையால் தமிழ்க் கவிதைஉருவப் புதுமையோடு உள்ளடக்க ரீதியான மாற் றங்களுக்குள்ளாகிப் புதிய பரிமாணத்தை அடைந்தது. வசன நடையிலிருந்து மாறுபட்டு நுட்ப மான சந்தங்களை உள்வாங்கி அர்த்த தன்மையுடைய சொற்களின் கெட்டிப்படுத்தலோடு உணர்வின் நிலைக்கேற்ப எண்ணத்தைப் பிரதிபலிக்கும் யாப்புடைத்த கவிதைகளாக நவீன கவிதைகள் காலமாறுதல்களைக் கடந்து நிலைபெறத் தொடங்கின.
ஈழத்து தமிழிலக்கிய வரலாற்றில் புதுமைச் சிந்தனைக்கூடான நவீன தமிழிலக்கியத்தின் தோற்றுவாயாக பத்தொன்பதாம் நூற்றாண்டு அமைந்து இருபதாம் நூற்றாண்டுத் தமிழி லக்கிய நெறியில் காணப்படும் சிறப்பியல்புகள் பலவற்றுக்கு காலெடுத்துக் கொடுத்தது. இந் நூற்றாண்டிலே யதார்த்த வாழ்வியலுக்கூடாக சமுதாய உணர்வினைப் பிரதி பலிக்கத் தொடங் கிய புலவர்கள் மரபுவழி வந்த வடிவங்களைப் பயன்படுத்தி புதிய எண்ணங்களையும் நிகழ்வு களையும் பாடினர். இவ்வகையில் தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் தத்தை விடுதூது (1892) நவீன கவிதையின் முதற்படியாக விளங்குகிறது. ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தில் காணப்பட்ட பெண்களின் அவலநிலையை எடுத்துரைக்க சமூகத்தை முக்கியத்துவப்படுத்தும் வலுவான ஒரு கதைக் கருவைத் தெரிந்து அதனை மரபுவழித் தூதுப் பிரபந்த வடிவத்துக்குள் அடக்கி வெற்றியும் கண்டார். பின்னர் பாவலர் துரையப்பாபிள்ளையுடன் இருபதாம் நூற்றாண்டு ஈழத் துத் தமிழ்க் கவிதை முனைப்புப் பெறுகிறது. முதன் முதலில் சமூகச் சிந்தனையைக் கவிதைப் பொருளாக்கியவர் என்னும் வகையில் பிள்ளையவர்களின் இலக்கியப் பணி முக்கியமானது. கைத்தொழில்,கூட்டு முயற்சிபெண் கல்விசாதிவிவாகமும் சீதனவழக்கமும் எங்கள் கற்ற வாலிபரின் பழக்க வழக்கங்களும்எங்கள் புதிய ஸ்திரீகள்தேசாபிமானம் எனப் பல்வேறு தலைப்புக்களில் இவர் எழுதிய பாக்கள் உள்ளடக்க முதன்மையைச் சுட்டி நிற்கின்றன. முன் னைய கவிதை மரபைச் சிதைத்து உருவத்திலும் புதுமையைப் புகுத்தியவராகப் பாவலர் விளங்குகின்றார். தான் கூறும் கருத்துக்கள் மக்களைச் சென்றடைதல் வேண்டும் என்னும் நோக்கில் பாமர மக்களால் கையாளப்பட்ட இசை வடிவங்களைப் பின்பற்றி, இவர் எழுதிய மயாழ்ப்பாண சுவதேசக் கும்மி (1907),எங்கள் தேசநிலை (1917), இதோபதேச கீதரச மஞ்சரி (1901)டு என்னும் நூல்கள் விதந்து போற்றத்தக்கவை.பாவலரைப் போல் சோமசுந்தரப்புலவர்விபுலாநந்தர்கல்லடிவேலுப்பிள்ளை முதலா னோர் சமூக வாழ்வியலை நிகழ்காலச் சித்திரிப்புக்களாகக் கொண்டு பாடல்களைப் புனைந்தா லும் இவர்களது பாக்கள் பழைய மரபுக்கும் புதிய மரபுக்கும் இடைப்பட்ட கால ஊற்றாகவே பிரவகித்தது எனலாம்.
1930களில் உருவான ஈழகேசரி கருத்தாழமிக்க காத்திரமான கவிதைகளைத் தமிழ் இலக் கியத்திற்கு அளித்தது. அல்லையூர் மு. செல்லையாமனுப்புலியார்மு.நல்லதம்பிஅகிலேஸ் வரசர்மா,உண்மைவிளம்பிசத்தியநாதன்யாழ்ப்பாணன்வேந்தனார்சாரதா,மஹாகவி, ஈசு முதலானோர் சமூகப் பார்வை கொண்ட நவீன கவிதைகளை யாத்தனர். இக்காலப் பகுதி யில் மலையகத்தின் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வாழ்வியலைப் பாடிய நடேசய்யர்,மீனாட்சியம் மாள் பணிகளும் போற்றிப் புகழ்ந்துரைக்கத் தக்கவை.1940களில் நடுக்கூற்றில் வெளிவந்த மமறுமலர்ச்சி (1945), பாரதி (1946-கொழும்பு)பாரதி (1946- மண்டூர்)டு முதலான ஈழத்துச் சஞ்சிகைகளும் நவீன கவிதைகளை உள்வாங்கிப் பிரசுரித்தன. சமூகத்தில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வு பொதுமக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைப் பாடுவதற்கு இவை கால் கோலாயின. சோ.நடராஜன்நாவற்குழி நடராஜன்அ.ந.கந்தசாமி,வரதர்கதிரேசன் எனக் கவிஞர்கள் பலர் இக்காலப் பகுதியில் உதயமாயினர். ஈழத்து நவீன கவிதை இயங்கியலின் புதிய சோதனை முயற்சியாக 13.06.1943இல் ஈழகேசரிமஓர் இரவினிலேடுஎன்னும் நீண்ட வசன கவிதையைப் பிரசுரித்தது. வரதரால் எழுதப்பட்ட இக்கவிதையே ஈழத்தின் முதல் புதுக் கவிதையாகும். 1950களில் நவீன கவிதைக்கூடாக முனைப்புப்பெறும் மஹாகவி பொதுமக்க ளின் வாழ்வியலைப் பாடினார். தற்கால உரைநடைக்குச் சமாந்தரமாகச் செய்யுள் நடையை நவீனப்படுத்துவதில் வெற்றியும் கண்டார். கவிதைபாநாடகம்,காவியம் எனப் புதிய செய்யுள் வடிவங்களுக்கூடாக எளிமையும் சொற்சிக்கனமும் மிக்க கவிதைகளைப் படைத்தார்.
மஹாகவிக்குப் பின்னர் ஈழத்து நவீன கவிதை புதிய தளத்தில் பிரவேசித்தது. தீவிரத்தன் மையுடன் இயங்கிய நவீன கவிதை அறிவியல்ஆத்மீகம்சமூகம்சார் பிரச்சினைகள்சமூக விடுதலை,தேசியம் எனப் பல்வேறு பாடுபொருட்களுக்கூடாகத் தன் பரப்பை அகலமாக்கிக் கொண்டது. முருகையன், நீலாவணன்சில்லையூர் செல்வராசன்ராஜபாரதிபுரட்சிக்கமால், அண்ணல் முதலான கவிஞர்களின் எழுச்சி பொருளுருவம் கொண்ட கலைச்சீர்மையான படைப்புகளுக்கு வித்திட்டது. 1956இல் இடம்பெற்ற ஆட்சி மாற்றமும் தனிச் சிங்களச் சட்டமும் தமிழர் மத்தியில் தேசியம் பற்றிய புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தின. இதுவே இக்காலக் கவி தையின் அதி உச்சபாடுபொருளானது. இ.முருகையன், மு.பொன்னம்பலம்பசுபதி,சுபத்திரன் போன்றோரின் கவிதைகள் இப்பொருண்மைத் தளத்திலேயே மையம் கொண்டன. 1959இல் உருவான எழுத்து புத்துயிர்ப்பும் புதுவேகமும் கொண்ட ஈழத்துக் கவிஞர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. தருமுசிவராமுதா.இராமலிங்கம் முதலானோரின் கவிதைகள் நவீன கவிதையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தன. ஆழமான படிமங்களை உள்வாங்கி இறுக்கமான சொற்கட்டுமானங்களுக்கூடாக வெளிப்படும் இக்கவிதைகள் கவித் துவ உத்வேகம் கொண்டவை.
1960களில் ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் பிரக்ஞைபூர்வமாகச் சமூகத்தை அணுகின. மரபை எதிர்த்து எழுந்த நவீன கவிதை மீண்டும் பாரம்பரிய வேர்களைத் தேடத் தொடங்கின. முருகையனின் மநெடும் பகல்டுசண்முகம்சிவலிங்கத்தின் மஆக்காண்டிடுநுஃமானின் மஅதி மானிடன்நிலமென்னும் நல்லாள்,தாத்தாமாரும் பேரர்களும்டு என்னும் கவிதைகள் இத் தளத்திலேயே இயங்கின. அ.யேசுராசாஏ.இக்பால்மு.சடாட்சரன்பாண்டியூரான் முதலா னோர் கலாபூர்வமான படைப்புக்களையும் ஈழத்து இலக்கியத்துக்கு அளித்தனர்.
1970களுக்குப் பின் ஈழத்து நவீன கவிதைகள் இலக்கிய ஆய்வாளர்களால் விதந்து நோக்கப்பட்டது. சமூக அரசியல் உணர்வுகளை உள்வாங்கி கலைத்துவமிக்க கலைப் பெறு மானமிக்க படைப்புக்களை இக்கால கவிஞர்கள் உருவாக்கினர். இருத்தலையும் இருத்தலுக் கான இருப்பையும் இக்கால கவிதைகள் பேசின. வெற்று அலங்காரமில்லாத உன்னத கவி தைகளை வ.ஜ.ச.ஜெயபாலன்,சிவசேகரம்அ.யேசுராசாசேரன்வில்வரத்தினம் முதலான பலர் ஈழத்து இலக்கியத்துக்களித்தனர். சோலைக்கிளிக்குப் பின்னர் ஈழத்தில் பேச்சு வழக்காற் றுச் சொற்களுக்கூடாக புதிய உத்திகளைக் கையாண்டு கவிதை சொல்லும் முறையயான்று வளர்ந்தது.
கட்டிறுக்கமான கவிதைகள் 1990களிலிருந்து இற்றைவரை வெளிவந்த வண்ணம் உள் ளன. 1980களின் பிற்கூற்றில் நவீன கவிதை புதிய தளத்தில் பிரவேசித்தது. நெகிழ்வுத் தன்மையுள்ள எளிமையான சொற்களைக் கொண்டு செறிவடர்த்தி கொண்ட செம்மையான கவிதைகளை இக்கால கவிஞர்கள் படைத்தனர். மசொல்லாத சேதிகள்டுமமரணத்துள் வாழ் வோம்டு என்னும் தொகுப்புக்களின் வருகை இதனை உறுதிப்படுத்துகிறது. பெண் விடுதலைபெண் சுதந்திரம் என்பவற்றுக்கப்பால் சமூக விடுதலையை அடிப்படையாகக் கொண்டு போரும் போரியல் வாழ்வும் கவிதையின் பாடுபொருளாயின. ஒடுக்கப்பட்ட இனமொன்றின் தார்மீகக் குரலாய் கவிதைகள் ஒலிக்கத் தொடங்கின.
1990களின் நடுக்கூற்றில் மையம் கொண்ட பின் நவீனத்துவம்,கட்டுடைத்தலுக்கூடாக கவிதை சொல்லும் புதிய முறையயான்றைத் தோற்றுவித்தது. நவீன மொழிநவீன சொல்லா டல் என விரியும் இக்கவிதா புனைவு வெளி வடிவத்தை உடைத்து எல்லைகளைத் தாண்டிப் பிரவகித்தது. மொழி மீறிய தருக்கமற்ற நிலையில் இயங்கும் இக்கவிதைகள் நவீன உத்திக ளுக்கூடாக புறவய வாழ்வை பூடகமாகவே காட்சிப்படுத்தின. அதேசமயம் நவீனத்துவத்தின் எல்லைகளைத் தகர்த்து அழகியல் ரீதியாக கற்பனைவாத மரபைப் பின்பற்றி மொழியை கட்டுப்பாடற்று இயங்க விட்டு கவிதை சொல்லும் முறையும் ஈழத்திலின்று பரவலாகக் காணப் படுகிறது. சந்திரபோஸ் சுதாகர்சித்தாந்தன்றியாஸ்குரானா,றஸ்மி, பா.அகிலன் ஆகியோ ரின் கவிதைகள் இதனைச் சாத்தியப்படுத்தின.
ஈழத்தின் கவிதைப் புனைவு மொழி தனித்துவமானது. பிரத்தியேக தளத்தில் இயங்கும் இப்புனைவு மொழி ஆழமான ஆய்வுகளுக்கூடாக அணுகப்பட வேண்டியது. அவ்வாறு நுணுகி ஆராயும் பட்சத்தில் இக்கவிதாப் புனைவு உயர் கவித்துவ நிலையில் தன் தருக்க தளத்தை அல்லது பிரக்ஞை தளத்தை விரித்துக் காட்டும்.

0 comments:

Post a Comment

 

Copyright © 2010 • அகமுகம் • Design by Dzignine