(1950-1970காலப்பகுதிகளை முன்வைத்து) - சி.ரமேஷ்
ஈழத்திலக்கிய வரலாற்றில் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகள் முக்கியமான காலப்பகுதியாகும்.நவீன தமிழ்க்கவிதைகள் பல, இஸ்லாமியரால் இக்காலப் பகுதியில் கணிசமான அளவுக்கு உருவாக்கப்பட்டன.இனமொழியை முக்கியத்துவப் படுத்தி இலங்கையானது சமூக,அரசியல் மாற்றங்களுக்குட்பட்ட போது தேசியம், தேசிய ஒற்றுமை பற்றிய கருத்துகளின் வளர்ச்சியும் அதனவசியமும் இக்காலப் பகுதியில் உணரப்பட்டன. பழைய தமிழ்மொழியை அடியொற்றிய பண்டிதப் போக்கில் இருந்து சற்று விலகி தற்கால மொழி நடைப் போக்கைப் பின்பற்றி எழுதிய புதியவர்கள் பலரைத் தன்னோடு இணைத்துக் கொண்ட நவீன கவிதை அர்த்தமும் ஆழமும் கொண்ட வீரியமிக்க கவிதையாக எழுச்சி பெற்ற காலப் பகுதி இது எனலாம்.அண்ணல்(ஜனாப் எம். எஸ்.எம்.சாலிஹ்),புரட்சிக் கமால் (மர்ஹீம் எம்.எம்;.சாலிஹ்),யுவன் ,சுபைர் அப்துல்காதர்லெப்பை, புலவர் மணி, ஆ.மு.ஷாிப்புதீன் முதலான கவிஞர்களின் எழுச்சியுடன் ஈழத்துத் தமிழ்க் கவிதை புத்துயிர்ப்பைப் பெறுகின்றது.
“ஆதிமுதல் இன்றளவும் வளர்ந்தாலும் ,தேதி
இலாத சிறந்த படைப்பின்றும் வேண்டும்
தமிழுக்கெனும் அவ்விருப்பத்தால் ஈண்டுபுதியது
எழுதி அளக்கின்றார்”
என மஹாகவியால் புகழப்பட்ட அண்ணல் “அவள்” என்னும் கவிதையுடன் இலக்கிய உலகுக்குப் பிரவேசித்தவா;.காதற் பாடலுக்கு ஓh; அண்ணல் எனச் சிறப்பிக்கப்படும் இவர்தனி மனித மனத்தின் உன்னத உணாச்சிகளை அலங்காரத் தன்மையற்று தெள்ளிய தமிழில் பாடியவர் இவருடைய “அவள்” என்னும் கவிதை இதற்குத் தக்க சான்று பகர்கிறது.
“உச்சிவானம் பிளந்த மின்னல்
உதட்டித் காட்டுறா
மச்சானென்று துள்ளும் மனதை
மறைத்துப் பூட்டுறா
கரியநாகம் போலப் பின்னல்
கண்ணை யுறுத்திட
விடியும் விழியை உயிரை உண்ண
விரட்டி விடுகிறா
செக்கா; வானச் சிவப்பை உடம்பிற்
சேர்த்து வைத்தவ
புக்கம் நெருங்கிப் போனா மட்டம்
பயந்தேன் சாகிறா”
(அண்ணல் கவிதைகள் பக்19-20)
வேட்கை மிகுதியால் உள்ளத்திற் சடைத்துப் படரும் உன்னத உணர்வுகள் இங்கு செம்மை சார்ந்த சொற்களுக் கூடாகக் கவிதையாகிறது.இவரின் ‘அண்ணல் கவிதைகள்’ என்னும் தொகுப்பு ‘இறை வணக்கம்’ முதல் ‘சிரிக்கினறேன்’ ஈறாக 43கவிதைகளை உள்ளடக்கியது. இறைத்துவம், காதல், சமத்துவம் என்னும் தளங்களில் இயங்கும் எளிமையான இக்கவிதைகள் ஓசை நயமிக்கவை.ஆழ்ந்த பொருட் செறிவுமிக்கவை.மரபின் பிடிக்குள் ஆட்பட்டு காதலை அழகியல்த் தன்மையுடன் வெளிப்படுத்தும் அண்ணல் கவிதைகள் தன்னிச்சையான மன உணர்வின் தடத்திலேயே இயங்குகின்றன.இதுவரை காலமும் கனத்த சொல்லழங்காரம், அணியலங்காரத்துடன் கடின வயப்பட்டிருந்த ஈழத்துத் தமிழ்க் கவிதை மொழியைச், சாதரண மக்களும் விரும்பி படிக்கத் தக்க வகையில் பேச்சு மொழிக்கு நெருங்கிய தொன்றாக உருவாக்கியதில் அண்ணல் முதன்மை பெறுகிறார்.
இக்காலப் பகுதியில் புரட்சி நோக்காலும் சிறந்த கற்பனையாற்றலாலும் செழுமையான கவிதையைப் படைத்தவர் மர்ஹூம் எம்.எச்;.சாலி என அறியப்படும் புரட்சிக்கமால் ஆவார்.
“தமிழ் இலக்கிய மரபினை அனுசரித்து, இஸ்லாம் வற்புறுத்தும் நம்பிக்கை, சமத்தவம்,சகோதரத்துவம் முதலிய இலட்;சியங்களை இஸ்லாமியப் புலவர்களின் உணர்வு வழிநின்று உணர்ச்சி செறிவுடன் பாடுபவர்”
ஏனப் பேராசிரியார் க.கைலாசபதியால் சிறப்பிக்கப்படும் புரட்சிக்கமால் வாழ்ககை நிலையாமை பற்றிய கருத்துகளுக்கு முதலிடம் கொடுத்து இறை ஞானத்தையும் மறை ஞானத்தையும் விளக்கும் ஆன்மீகக் கவிதைகளைச் சமூக நோக்கில் வெளிப்படுத்தியவர் பேராசிhpயர் க.கைலாசபதியின் மதிப்புரையுடன் வெளி வந்த “புரட்சிக்கமால் கவிதைகள்” என்னும் தொகுதி ‘காணிக்கை’ தொடக்கம் ‘விளக்கத்துணை’ ஈறாக 77கவிதைகளைக் கொண்டது.சூபித்துவ மெய் ஞானக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட இக்கவிதைகள் மனித வாழ்க்கையில் ஆழமான நம்பிக்கைகளை விதைப்பவை.சமத்துவமான புதிய சமூக மொன்றைத் தரிசிக்க விளைபவை.
“ ஆணென்றும் பெண்னென்றும் பேதமில்லை
அனைவருக்கும் சமஉhpமை உண்டு என்று
மாண்புயா;ந்த எமதிஸ்லாம் செப்புதென்று
மடைதிறந்த வௌ;ளம் போல மேடையேறி
வீண் கூச்ச லிடுகின்றீர் உங்கள் பேச்சில்
விழிப்புற்ற மங்கையினைத் தட்டிப் பேசி
தீண்டுகிறீர் உரிமையினை‘பர்தா’ என்னும்
திரையிட்டு மறைக்கின்றீர் நீதியீதோ”
மதத்தைக் கடந்து பெண் சமத்துவத்தைப் பாடும் உயர்ந்த உள்ளம் கொண்ட புதுமைக் கவிஞனின் புரட்சிக் குரலாய் ஒலிக்கும் இக்குரல் ஏற்றம் காணத்துடிக்கும் சமுதாய எழுச்சியைக் கோரி நிற்கிறது.அறப் போதகராயும் ஆத்ம ஞானியாயும் இலக்கிய ஆர்வலராகவும் வாழ்ந்த புரட்சிக் கமால்
“சாதி ஒன்றாய் நிறமொன்றாய்
சமயம் ஒன்றாய் மொழி ஒன்றாய்
நீதி ஒன்றாய்"
எனப் பாடியமைக்கமைய அவ்வழி வாழ்ந்தவர்அண்ணல் காந்தியின் அகிம்சாவழி நின்று சமூகப் பிரக்ஞை மிக்க கவிதைகளைத் தந்தவர்.
புரட்சிக்கமாலைப் போன்று மரபுவழிக் கவிதைகளுக்கூடாகச் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை சமயவழி நின்று வெளிப்படுத்தியவர் அப்துல் காதர்லெப்பை ஆவார் 1941-1942இல் சென்னை ‘தாருல் இஸ்லாம் சஞ்சிகையில் ‘அதான்’ என்னும் பெயருக்கூடாக அறியப் படுமிவர்“ஆசிரியர் திலகம்” என்னும் விருதுப் பெயராலும் சிறப்பிக்கப்பட்டவர்.1950களில் இலக்கியத் துறையிலிருந்து சற்று விலகியவராகக் காணப்பட்ட இக்கவிஞர் 1960களில் ஈழம் போற்றும் இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரானர். இவ்வகையில் மட்டக்களப்பு காத்தான்குடி முஸ்லிங்களிடம் நிலவும் ஆசாரங்களை அடித்தளமாகக் கொண்டு அப்துல்காதர் லெப்பையால் பாடப்பட்ட செய்னம்பு நாச்சியார் மான்மியத்தைக் கூறலாம்.சமூகக்குறைபாடுகளையும் சீர் கேடுகளையும் பாடும் முகமாக எழுந்த கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்”, பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் 'சீதனக்காதை”, என்னும் அங்கத நுhல் வரிசையில் எழுந்த காவியமாக இதனைக் கொள்ளலாம். “சமுதாய வழக்கக் குறிப்பேடு” எனப் பேராசிரியர் சு.வித்தியானந்தனால் சிறப்பிக்கப்படும் இந்நூல் ஈழத்து இஸ்லாமி யரின் திருமணச் சடங்கினைக் கற்பனையாற்றலும் கவியமைப்பும் பொருட்சிறப்பும் பொருந்தும் வண்ணம் எடுத்துரைக்கிறது. இது தவிர இக்காலப் பகுதியில் கவிஞரால் ‘இக்பால் இதயம்; ‘இரசூல் சதகம’;,ஷமுறையீடும் தோற்றமும்’ முதலான மரபுக் கவிதைத் தொகுப்புக்கள் வெளிக் கொணரப்பட்டன.
வெண்பாப்புலி, இலக்கிய மாமணி, நுhறுல் பன்னான் என்னும் பட்டங்களினால் சிறப்பிக்கப்படும் புலவா;மணி அல்ஹாஜ் ஆ.மு.‘hpபுத்தீன் விபுலாநந்தாpடம் கவி பயின்று செந்தமிழில் யாப்பமையக் கவி பாடியவா;. இவா; மட்டக்களப்பில் ஆசிhpயராகக் கடமையாற்றிய காலப் பகுதியில் அங்குள்ள நாட்டுக்கவிகளை ஒன்று திரட்டி வாதுக் கவிச் சித்திரமாக அமைத்து பாடசாலை மேடைகளில் அரங்கேற்றிக் கட்புலக் கலையாகவும் மாற்றியமைத்தவர் 1952 ஆம் ஆண்டு அரசின் வேண்டுகோளுக்கமைய க.பொ.த.சாதாரண வகுப்புக்காக தேந்தெடுக்கப் பட்ட சீராப்புராண பதுறுப் படலத்துக்கு உரையெழுதிய இவர், சமூகத்தில் மார்க்க அறிவைப் பெருக்குதல் பொருட்டு 1967 இல் பெருமானார் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளைத் தெரிந் தெடுத்து வெண்பா யாப்பில் “நபிமொழி நாற்பது” என்னும் நூலை யாத்தார். 1969 இல் இந் நூலுக்கான சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றுக் கொண்டார்.
“ அகில உலகிற்கும் ஆன்மிக வாழ்வும்
இக வாழ்வும் நல்கும் இனிய - புகழாகும்
நம்பிநபி நாயகனார் நன்மொழிக ளெம்மொழிகள்
நம்பினார் சோர்வார் நலம்”
எனப் புலவர்மணி பெரியதம்பிப் புலவரால் சிறப்பிக்கப்படும் இந்நூல் இஸ்லாமியருக்கு மட்டுமன்றி ஏனையோருக்கும் தேவையான வாழ்வியல் விடயங்களை விளக்கி நிற்கிறது.இதனை அடுத்து இக் காலப் பகுதியில் “சயிதா” என்னும் கவிதை நூலையும் வெளியிட்டார்.'வெண்பாவி லென்னை நீ வென்றாய்” எனப் புலவர்மணி அவர்களால் சிறப்பிக்கப்படும் இவர் 1969 இல் ‘புலவர் பட்டம்’ வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.
இக்காலப் பகுதியில் மலையகத் தமிழகம் தந்த கவிஞர் எம்.ஸி.எம்.சுபைர் ஆவார் 1948 பங்குனி “சமுதாயம்” என்னும் சஞ்சிகையினூடாக இலக்கிய உலகில் காலடி பதித்த சுபைர் 1954 இற்குப் பின் வானொலிக் கலைஞராகவம் கவிஞராகவும் அறியப்பட்டவர். 1956 இல் இவரினால் வெளியிடப்பட்ட ‘மலர்ந்த வாழ்வு” என்னும் சிறுகாவியம் அரச அங்கீகாரத்தைப் பெற்று பாடசாலை மாணவா; பயில்வதற்குhpய உப பாட நூலாகக்கப் பட்டது.1967 இல்'மலரும் மணமும்” என்னும் பாலர் பாமாலைக் கூடாகக் குழந்தைக் கவிஞராகவும் அறியப்பட்ட இவர் 1969இல் மட்டக்களப்பு கிராமியக் கவிதைகளைக் “கண்ணான மச்சி” என்னும் பெயரில் தொகுத்தளித்தார். இந்நூலே இவரைப் புடம் போட்ட புலமையாலனாகவும் வெளியுலகுக்கு உணர்த்தியது. 1960 - 1964 காலப் பகுதியில் மாணவர் நன்மை பொருட்டு இவரால் தொடங்கப் பட்ட “மணிக்குரல்” என்னும் சஞ்சிகை மலையக இலக்கியத்தில் ஒரு மைல்கல் எனலாம்.கவிஞர்அப்துல் காதர்லெப்பையின் இரண்டாவது கவிதாப் பிரவேசம் இச்சஞ்சிகையின் வருகையுடனேயே புத்தெழுச்சி பெற்றது. சுதந்திரன், தினகரன், வீரகேசரி முதலான பத்திரிகைக் கூடாகவம் ‘மணிவிளக்கு’, ‘பிறை’, ‘முஸ்லிம் முரசு’, முல்லை போன்ற தமிழ் நாட்டுச் சஞ்சிகைக் கூடாகவும் நன்கறியப்பட்டவர். ஸூபைர் மலாயவிலுள்ள “நறுமணம்” சஞ்சிகையிலும் எழுதியவர். ஈழத்திலக்கிய வரலாற்றில் சுபைரின் இடமும் இருப்பும் விரிந்த நோக்கில் ஆராயப் படவேண்டியது காலத்தின் தேவையாகும்.
1950களில் “அன்னம்”என்னும் கையெழுத்துச் சஞ்சிகைக் கூடாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர். பாவலர் பஸீல் காரியப்பர்ஆவார்;.‘ஷதிபுத்தீன், ஈழமேகம் (பக்கீர்த்தம்பி), ஏயாரெம்(சலீம்) முதலானோரின் தூண்டுதலால் கவிதை உலகுக்கு பிரவேசித்த பஸீல் காரியப்பார் நலிந்த மனிதனுக்காக இரங்கி நம்பிக்கையூட்டும் மனித உறவுகளைக் கவிதையாகப் பாடியவர். "உயிர்”, "பதுகை”, கவிதைகளுக் கூடாகப் பலரால் அறியப்பட்டவர். பஸீல் காரியப்பா; முற்கூறிய இக் கவிதைகளுக்காக முறையே முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடாத்திய “தங்கத் தாத்தா”,கவிதைப் போட்டியிலும் நீலாவணன் பேரவை நடாத்திய கவிதைப் போட்டியிலும் பரிசில்களைப் பெற்றவர். “கவிதை பிறந்தது” என்னும் வானொலி நிகழ்ச்சிக் கூடாக ஈழத்து இலக்கிய உலகுக்குப் பலரை அறிமுகம் செய்த பஸில் காரியப்பர். வானொலியில் “கவிதைச் சரம்” என்னும் நிகழ்ச்சியையும் நடாத்தியவர்.இவர் எழுதிய “அழகான இருசோடிக் கண்கள்”என்னும் மெல்லிசைப் பாடல் இன்றும் என்றும் இவர் புகழைப் பாடும்.
1950 களின் பிற்பகுதியில் கலை இலக்கிய உலகிற்கு அடியெடுத்து வைத்த எம்.எச்.எம் ஷம்ஸ் புனைகதை, கவிதை, சிறுவர; பாடல்கள், விமாp;சனம், புகைப்படத்துறை எனப்பல்வேறு தளங்களில் இயங்கியவர; அபுசாலி அப்துல்லதீஃபை ஆசிரியராகக் கொண்டு உருவான இன்சான் பண்ணையில் வளர;ந்த ஷம்ஸ், “பாஹிரா”, “அஷ்ஷம்ஸ்”, ஆபுபாஹீம்”, “நீல்கரைநம்பி”, “நீல்கரை வையோன்:, “வல்வையு+ர;ச்செல்வன்”, என்னும் புனை பெயருக்கூடாகவும் அறியப்பட்டவர;. ஆரம்பத்தில் மரபுக்கவிஞராக இருந்து வெண்பாக்களை யாத்;த இவர; பிற்பட்ட காலங்களில் புதுக்கவிதைகளையும் ஹைகூகவிதைகளையும் எழுதியவர;. இவை பற்றிய கட்டுரைகளையும் வெளியிட்டவர;.
1950களில் கிழக்கிலங்கை தந்த இஸ்லாமியக் கவிஞர;களில் குறிப்பிட்டுக் கூறக் கூடியவர;களில் ஒருவர;. மருதூர;க்கொத்தன். வி.எம்.இஸ்மாயில் என்னும் இயற்பெயர; கொண்ட மருதூர;கொத்தன் மருதமுனை அரசினர; தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆ.மு.ஷரிபுதீன் உபாத்தியாரிடம் கல்வி பயின்றவர;.ஆ.மு.ஷரிபுதீனின் தூண்டுதலால் இலக்கிய உலகிற்கு புகுந்த இவர;, சுதந்திரனின் “இலக்கியப் பு+ங்கா” ஊடாகவும் நன்கறியப்பட்ட வளமான எழுத்தாளர;களில் ஒருவராக விளங்கினார;. கற்பனை நயமிக்க இறுக்கமான மரபுக்கவிதைகளை எழுதிய மருதூர;க் கொத்தனின் கவிதைகள் தொகுக்கப்பட்டு 1977 இல் “காவியத்தலைவன்” என்னும் பெயரில் வெளிவந்தது. இக்கவிதைத் தொகுதியை ‘ஆ+பு+ஹபினா’ என்னும் பெயரிலேயே வெளியிட்டார;.மரபுக்கவிதையிலிருந்து முற்றுமுழுதாகத் தமிழ்க்கவிதை விடுபடாத சூழ்நிலையில் புதிய போக்குகள் சிலவற்றைக் கொண்டு நவீன கவிதைகள் அரும்பும் காலமாக இக்காலகட்டத்தைக் கூறலாம். விடுதலைக்குப் பின்னர; ஏற்பட்ட சமூகமாற்றம் அவை குறித்த ஏமாற்றங்களும் அவற்றின் விளைவுகளும் கவிதையின் புதிய பாடுபொருளாயின. நகரமயமாதல், தொழில்மயமாதல், பெண்ணியம,; சமூக ஏற்றத்தாழ்வுகள் எனப் பன்முத தளங்களை மையப்படுத்தி ஈழத்துக் கவிதைகள் எழுந்தன. மரபுத்தளையில் இருந்து முற்று முழுதாக விடுபடாது, புதிய பாடுபொருளைக் கொண்ட உள்ளடக்கத்துக் கூடாக ஈழத்துத் தமிழ்க்கவிதைகள் நவீன கவிதையாக பரிணமித்தன.
1960 களுக்குப் பின் முஸ்லீம் கவிஞர;களால் படைக்கப்பட்ட ஈழத்துத் தமிழ்க்கவிதைகள் சமூகப் பிரக்ஞையும் முற்போக்குச் சிந்தனையும் கொண்ட நவீன கவிதையாக உருக்கொண்டன. இனரீதியான அரசியல் எழுச்சியும் தேசிய விழிப்புணர;வும் ஏற்பட்ட இந்தக் காலப்பகுதியில் ஈழமெங்கும் மொழிப்பிரச்சினை பு+ரண விசுவரூபமெடுத்தது, இதன் காரணமாக சமூகத்தின் மேலாதிக்கத்தை எதிர;ப்பதை நோக்காகக் கொண்டும் அதே இனங்களுக்கிடையே சமத்துவ ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் வகையிலும் கவிதைகள் பல எழுந்தன. எம்.ஏ.நுஃமான், ஏ.இக்பால், மருதூர;க்கனி, அன்பு முகையதீன், பண்ணாமத்துக் கவிராயர;, சாரணா கையு+ம,; திக்குவல்லை கமால் என ஏராளமான முஸ்லீம் கவிஞர;களின் எழுச்சியும் அளுத்கம முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் இலக்கிய முயற்சியும் ‘தினகரன்’, ‘வீரகேசரி’ இதழ்களில் இஸ்லாமியருக்கு ஒதுக்கப்பட்ட முஸ்லீம் பக்கங்கள் என்ற பகுதியும் ‘இன்சான்’, ‘கவிஞர;’ முதலான சஞ்சிகைகளின் வருகையும் முஸ்லீம்களினால் எழுதப்பட்ட கவிதையை பிறிதொரு தளத்துக்கு இட்டுசச் சென்றன.
1960களில் முகிழ்ந்த மூன்றாம் தலைமுறைக்கவிஞர;களுள் முக்கியமானவராகக் கருதப்படும் எம்.ஏ.நுஃமான் நீலவாணன், மஹாகவி ஆளுமையின் கீழ்த்தன்னைப் புடமிட்டுக் கொண்டவர; அரம்பத்தில் காதல், இயற்கை, பிரிவு எனத் தன்னுணர;வு சார;ந்த கவிதைகளை முன்னையவரின் தொடர;ச்சியாக எழுதிய நுஃமான் பிற் காலத்தில் மனோரீதியப்பாங்கு நீங்கி நடப்பியல் வாழ்வைச்சித்தரிக்கும் தனித்துவமான கவிதைகளைப் படைத்தவர; “மீட்சி”, “நம்பிக்கை”, “கனவும் காரியமும்” முதலான கவிதைகள் பல, இத்தளத்திலேயே இயங்குகின்றன. மாக்ஸிய நோக்குடைய முற்போக்கு கவிஞராக அறியப்பட்ட எம்.ஏ.நுஃமான் சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான கவிதைகளை அதிகம் எழுதியவர;. வர;க்க முரண்பாடுகள், வர;க்க மேலாதிக்கத்தைக் களைந்து சமதர;ம சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் ஓங்கி ஒலித்த நுஃமானின் குரல் சமகாலப் பிரச்சினையைச் சமூகப் பிரக்ஞையுடன் அணுகியது. ‘அதிமானிடன்’, ‘கோயிலின் வெளியே’, ‘நிலம் என்னும் நல்லாள்’ என்னும் கவிதைகள் இதற்குத் தக்க சான்று பகர;கின்றன.
வைப்புகளினூடாகக் கருத்துக்களை முன் நிறுத்துவதாலும் (நேற்றைய மாலையும் இன்றைய காலையும்) நிகழ்ச்சிக் கோவைகளின் வழியே கருத்துக்களை முன்நிறுத்துவதாலும் (நிலமெனும் நல்லாள்) கவிதையைக் கலையாக்க நெறியாக்கிக் காட்சிப்படுத்துவதாலும் (நாடகப்பாங்கில் வெளிப்படும் கோயிலின் வெளியே) வரலாற்றுக்கூடான எடுத்துரைப்பியலாக விளங்குவதாலும் (அதிமானிடன்) நிகழ்வுகளைப் பு+டகமாகச் சரித்திர வாயிலாக வெளிப்படுத்துவதாலும் தாத்தாமர;களும் பேரர;களும்) நுஃமானின் கவிதைகள் ஆழமான பொருளுவம் கொண்டவையாக விளங்குகின்றன. அலங்காரத்தன்மையற்று கருத்து நுட்பமாக விளங்கும் நுஃமான் கவிதைகள் ஓசை நயம் கொண்டவை. கட்டற்ற உணர;வுகளின் வழி எளிமையான நடைமுறையிலமைந்த கச்சிதமான வடிவத்தைக் கொண்ட நுஃமானின் கவிதைகள் புதிய உள்ளடக்கம,; புதிய வெளிப்பாட்டு முறைகளுக்கூடாக நவீன கவிதையைhகத் தன்னை அடையாளப்படுத்தியது.
‘அரும்பு’ (கையெழுத்துப்பிரதி) ‘சுவை’ (ரோனியோப்பிரதி) என்னும் சஞ்சிகைகளுக்கூடாக 1965 இல் படைப்பிலக்கியவாதியாகப் பிரவேசித்த திக்குவல்லை கமால் தினபதிப் பத்திரிகைக் கூடாகத் தமிழ்க்கவிதையுலகில் நன்கறியப்பட்டவர;. வெற்றுச் சொற்களுக்கூடாக அலங்காரத் தன்மையுடன் எழும் திக்குவல்லைக்கமாலின் கவிதைகள் உணர;வின் மேலாண்மையோடு கருத்துக் குவிப்பாகவே காணப்படுகின்றன.
மஹாகவி, நீலவாணன், முருகையன், வி.கி.ராஜதுரை முதலானோரின் கவிதைகளைப் படித்த அருட்டுணர;வினால் கவிதை உலகிற்கு காலடி எடுத்து வைத்த எம்.எம்.பாறுக் பாடசாலைக்காலத்தில் இஸ்லாமியப்பாடல்களை எழுதியவர;. பின்னாளில் தாரகை மூலம் பண்ணாமத்துக்கவிஞராக அறிமுகமான இவர; வங்கக் கவிஞர; ஹரேந்திரநாத் சடோபாத்யாயருடைய கவிதைகளைத் தமிழிலக்கியத்திற்கு அறிமுகம் செய்தார;. சமதர;ம கருத்துக்களால் கவரப்பட்ட பண்ணாமத்துக்கவிராயர; அடிநில மக்களின் வாழ்வியல் அவலங்களை கவிதைகளாக வடித்தாh;. தேசாபிமானியில் வெளிவந்த “நாலு வாய்ச் சோறு” உள்ளிட்ட கவிதைகள் சில இதற்குத் தக்க சான்று பகர;கின்றன.
1960களில் தினகரன் பாலர; கழகத்திற்கு எழுதிய கவிதையையடுத்து இலக்கிய உலகுக்கு பிரவேசித்த அன்பு முகைதீன் பின்னர; ஸாஹிராக்கல்லூரியிலிருந்து வெளிவந்த “உதயஜோதி” என்னும் கையெழுத்துச் சஞ்சிகைகக்கூடாக அனைவராலும் அறியப்பட்டவர;. சமூக உணர;வோடு மனிதாபிமானியாகக் கவிதைபாடும் அன்பு முகைதீன் முருகையன் கூறுவதைப் போன்று காதலன் - காதலி, தாய் - குழந்தை, தந்தை - பிள்ளைகள், ஆசிரியர; - மாணவர;கள், அகதிகள் - மேன்மக்கள், கவிஞர;கள் - கலைஞர;கள், வறியோர; - செல்வர; என மனிதர;களுக் கிடையில் நிலவும் உறவு விகற்பங்களைக் கவிதையாகப் பாடியவர;.
ஆரம்ப காலத்தில் அழகியற் கவிஞராக விளங்கி பின்னர; முதிர;ச்சி பெற்ற கவிதாளுமைகளாய் விளங்கியவர;கள் மருதூர;கனி, எம்.எச்.எம்.புஹாரி (பலாஹி) முதலானோரைக் கூறலாம். வீரகேசரியில் “அவள்” என்னும் கவிதைக்கூடாக இலக்கிய உலகிற்கு பிரவேசித்த மருதூர;க்கனி அக்காலத்தில் வெளிவந்த தினகரன், கவிஞன் இதழ்களுக்கூடாகவும் அறியப்பட்டவர;. மருதூர;க்கனியைப் போன்று கிழக்கிலங்கையிலிருந்து தோன்றிய பிறிதொருவர; எம்.எம்.அஸ்ரப் ஆவார;. கவிஞர; திலகமென அழைக்கப்பட்ட இவர; சமயம், அரசியல், காதல், குழந்தைப் பாடல்கள், இசைப்பாடல்கள் எனப் பன்முகப்பட்ட கவிதைகளை எழுதினார;. கற்பனை கலந்த அதிக வர;ணணையுடன் கூடிய அஸ்ரப் கவிதைகள் விசாலமான சிந்தனைப் புலத்தில் கட்டுறுபவை. நேர;த்தியான வடிவமைத்துக் கொண்ட இக்கவிதைகள் மனித வாழ்வியலைப் பாடுபவை.
பதுளையைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட என்.எஸ்.ஏ.கையூம், காரணா கையு+ம் என்னும் புனைப் பெயரைக் கொண்டவர;. குழந்தைக் கவிஞராக ஆரம்பத்தில் விளங்கிய கையு+ம் பின்னர; சமூகம் சார;ந்த கவிதைகைள இஸ்லாமியக் கருத்துப்புலத்தில் படைத்தவர;. ‘குழந்தை இலக்கியம்’, ‘குர; ஆன்ஹதீஸ்’, ‘நபிகள் நாயகம்’, ‘கவிதை நெஞ்சம்’, ‘சிறுவர; பாட்டு’, ‘நன்னபிமாலை’, ‘என் நினைவில் ஒரு கவிஞர;’ முதலான நூல்களை எழுதிய காரணா கையு+ம் சிறுவர;களுக்காக ‘பாரதி’ என்னும் சஞ்சிகையை நடாத்தியவர; ‘குழந்தைக் கவிஞர;’, ‘கவிமணி’, ‘நஜ்முஸ் ஸப்ஹர’ (கவித்தாரகை) ‘நூருள் கஸீதா’ (கவிச்சுடர;;) ‘கலாபு+ஷணம்’ முதலான பட்டங்களையும் விருதுகளையும் பெற்ற இவர; 1961 ஆம் ஆண்டிலிருந்து இற்றை வரை எழுதி வருபவர;.
1969இல் “தியாகச்சுடர;” என்னும் ‘இமாம் ஹீசைன் (ரலி)’ அவர;களின் சோக வரலாற்றை பாடிப் பாராட்டுப் பெற்ற கவிஞர; கல்ஹின்ன எம்.எச்.எம்.ஹலீம்தீன் இஸ்லாமிய வரலாற்றையும் வாழ்வியலையும் மனித நேயத்துடன் பாடுபவர;. மனித மனதில் உள்ளுறைந்து கிடக்கும் அசுர இயல்புகள், பண்பாட்டு நிவைகளைப் பாடிய ஹலீம்தீன் கல்லூட்டு கவிராயர; என்னும் புனைப் பெயருக்கூடாகவும் அறியப்பட்டவர;.
இக்காலப் பகுதியில் நற் கவிதைகளைத் பலவற்றைத் தந்தும் பரவலாக அறியப்படாதவராக யு.எஸ்.ஏ.மஜீத், யு+.எல்.எம்.குவைலித் (மறையும் நிழல்), ஏறாவு+ர; யு+சுப், யு+.எம். தாஸிம் (கம்மல்துறை மறைதாசன்) மர;ஹீம் ஈழமேகம், எம்.ஐ.எம்.பக்கீர;த்தம்பி முதலானோரைக் கூறலாம். இவர;களில் பெரும்பாலானோர; ஓசைநயமிக்க மரபுக்கவிதைக்கூடாகவே அறியப்பட்டவர;கள்.
1950களின் நடுக்கூற்றில் முக்கியத்துவப்படுத்தப்பட்ட சுதேசியக்கல்வி இனங்களின் பண்பாட்டு வேர;களைக் கண்டறிவதற்கு கால்கோலிட்டது. தேசம் பற்றிய விழிப்புணர;வு இனம், மொழி பற்றிய பிரக்ஞையும் முக்கியத்துவம் பெற்ற சூழலில் நவீன கூறுகளை உள்வாங்கி எழுந்த தமிழ்க்கவிதை முஸ்லீம் கவிஞர;களால் வளம் பெற்றது. புதுக்கவிதையில் தனிமனித உணர;வுநிலையும் சமூகநிலையும் ஆரோக்கியமான முறையில் அணுகப்பட்ட காலப்பகுதி இதுவென்பதால் சமூக உணர;வும் (மக்கள்), சமகால உணர;வும் (எதார;த்தம் பற்றியது) வரலாற்றுணர;வும் (ஆன்மீக கலாச்சார மனித மதிப்புக்களின் தொடர;ச்சியில் மனிதனின் வளர;ச்சி பற்றியது) எதிர;கால உணர;வும் மிக்க கவிதைகளை முஸ்லீம் கவிஞர;கள் படைத்தனர;. அவ்வகையில் காலத்தின் கருவு+லமாகவும் நிதர;சனத்தின் நிழற்படிவமாகவும் விளங்கும் இக்கவிதைகள் ஆழமானது. அகற்சியானது. புதிய அர;த்தப் பெறுமானங்களை உள்வாங்கி உயர;ந்த மீபொருண்மையில் கட்டமையும் இக்கவிதைகள் செய்நேர;த்தி கொண்டு கலைத்திறனாக்கும் கலையாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது.
நவீன கவிதை வரலாற்றில் 1970கள் விசேஷமாகக் குறிப்பிடப்பட வேண்டிய காலகட்டமாகும். இக்காலப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் இலக்கிய விழிப்புணா;வும் தென்னிந்தியப் புதுக்கவிதையின் செல்வாக்கும் நூற்றுக்கணக்கான இளைஞா;களைக் கவிதை எழுத வைத்தது. எண்ணங்களையும் உணா;வுகளையும் இலகுவாக வெளியிடுவதற்கான சாதனமாகப் புதுக்கவிதை இருந்தமையால் இக்காலப்பகுதியில் ஏராளமான புதுக்கவிதை பிரசுரங்கள் வெளிவந்தன ஆயினும் இவற்றில் கலைப்பெறுமானம் கொண்ட கவித்துவமான படைப்புக்கள் மிகச் சொற்ப அளவிலேயே வெளிவந்தன உணா;வுகளை மையப்படுத்தி எழுந்த இக்கவிதைகள் சமூகப் பிரக்ஞை கொண்ட காத்திரமான கவிதைகளாகக் காணப்பட்டன. 1960களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அன்பு முகைதீன், மருதூh;கனி, நுஃமான், எம்.எச்.எம்.ஷம்ஸ் திக்குவல்லை கமால், அன்பு ஜவா;கா;ஷா, முதலான பலா; இக்காலப்பகுதியிலும் தொடா;ந்து இயங்கினா;. புதுக்கவிதை முனைப்பாகவும் வேகமாகவும் மலரத் தொடங்கிய இச்சூழலில் அன்புடீன், ஈழத்துநூன், அனல்அக்தா;, பாலமுனை பாரூக், ஜமாலி ஜவாத் மரைக்காh; (சோலைக் குமரன்), ஏ.கே.எம்.நியாஸ், எம்.பி இராஜ்தீன், ஜௌபா; மௌலானா போன்ற முஸ்லீங்கள் பலா; நவீன கவிதையின் உட்கூறுகளை உள்வாங்கி புதிய வீச்சுடன் இயங்கினா;.
‘கணையாளி’, ‘சிரித்திரன்’, ‘மல்லிகை’, ‘இதயம்’, ‘வீரகேசாp’, ‘பு+ரணை’, ‘அணு’, ‘கற்பகம்’, ‘தமிழமுது’,’;கவிதை’ முதலான இதழ்களுக்கூடாக அறியப்பட்ட திக்குவல்லைக்கமாலின் இருபத்தேழு கவிதைகளைத் தொகுத்து பதினாறு பக்கத்தில் ‘எலிக்கூடு’ என்னும் கவிதைத் தொகுப்பு 1973இல் வெளிவந்தது. யாதாh;த்த தன்மையற்று வாh;த்தையாலங்களுக் கூடாகக் கட்டுறும் இக்கவிதைகள் வானம்பாடித் தாக்கத்தால் உருவானவை.
“ போh;கள்…… ஃ பஞ்சம்…… ஃ குடிசனப்பெருக்கம்…… .ஃ இந்நிலையில் ஃ தோழியின் கல்யாணத்துக்கு ஃ உடுப்பு…… ..ஃ புத்தகம்……பாவனைப் பொருட்கள் இவற்றைப் பாpசளித்து என்ன பயன்? ஆதலால் கா;ப்பத்தடை மாத்திரைகளை பாpசளித்தேன்” அனுபவவெளிப்பாட்டுக்கு அப்பாற்பட்டு உணா;வின் தீவிரத்தன்மையிலிருந்து விலகி வரட்சியான அழகியல் தன்மைகளுடன் இணைந்த கவிதையாக இது விளங்குகின்றது. ஈழத்தில் முதலெழுந்த புதுக்கவிதைத் தொகுதி என்னும் வகையிலும் மனிதாபிமானத்தை முன்னிலைப்படுத்தி சமூகச் சீh;கேடுகளை களையுமுகமாக எழுதப்பட்ட தொகுதி என்பதாலும் சுவாமி ரத்னவன்ஸ தேரரால் முழுமையாக சிங்களத்தில் மொழிபெயா;க்கப்பட்ட தொகுப்பு ஆகையாலும் ஈழத்து கவிதை இலக்கியவளா;ச்சியில் முக்கிய தொகுப்பாகக் கொள்ளப்படுகிறது.
1973 இல் பலாலி ஆசிhpயா; கலாசாலையில் திக்குவல்லை கமாலின் நட்பினால் புதுக்கவிதை துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டஅன்பு ஜவஹர;ஷா ‘கதம்பம்’ என்னும் இலக்கியச் சஞ்சிகைக்கூடாக அறியப்பட்டவர;. பாடசாலை ஆசிரியராக கடமையாற்றிய முஹமது ஜவஹர;ஷா 1974 இல் ‘பொறிகள்’ என்ற பெயரில் 44 பேரின் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டாh;. ஈழத்தில் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட புதுக்கவிதைகளின் தொகுப்பு முயற்சி இதுவாகும். மனித வாழ்வின் இருப்பியலை அதன் நிகழ்வுகள் முரண்பாடுகளுக்கூடாக பதிவு செய்த இப்புதுக்கவிதைக் தொகுப்பு புதுக்கவிதைக்குரிய புதிய தளங்களைத் திறந்து வைத்தது. 1975ஆம் ஆண்டு வெளிவந்த இவரது “காவிகளும் ஒட்டுண்ணிகளும்” என்ற தொகுதியில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை வெளிப்படுத்திய அன்பு ஜஹகர;ஷா அப் பிரச்சினைகளுக்கான தீர;வினை முன்வைத்து இக்கவிதைகள் எழுதப்படவில்லை’ என்னும் கருத்து அ.யோகராசா முதலான சிலரால் முன்வைக்கப்பட்டது. வானம்பாடிக் கவிதைகள் போன்று வாய்ப்பந்தலுக் கூடாக இயங்கும் இவரின் பெரும்பான்மையான கவிதைகள் தன் கவித்துவத்தை இழந்து பிரக்ஞையற்று கோசங்களாகவே நிற்கின்றன.
“சேர;ந்தே வருகின்ற
துன்பத் துகள்கள்
வெடிக்கும் ஒரு நாளில்….
அதை இன்றைய தாக்க
“ஆட்” பேப்பரில்
செந்நிறத் தூரிகையால்
கத்தி அரிவாள்களை
ஆடம்பரமாய் போட்டோம்”
மாh;க்சிஸம் காலாவதியாகி விட்டதை வெற்றுவாh;த்தைக்களுக்கூடாகக் இக் கவிதையில் காட்சிப்படுத்துகிறாh;. அழகியல் வர;ணனைக்கு உதவும் வகையில் இல் நிறப்பெயர;கள் 103 இடங்களில் வானம்பாடிக் கவிதையில் பின்பற்றப்பட்டதை அறிய முடிகிறது.இதன் தொடா;ச்சியை இக் கவிதையிலும் காணலாம். இவர; பின்னாளில் தமிழ்வேந்தன், பிர;தவ்ஸி மாணிக்கராசன், வன்னிக்குமரன், துஷாட், திரையன்பன், ஞானஅநுஷா என்னும் புனைபெயருக்கூடாகவும் அறியப்பட்டாh;.
குறைவாகவே எழுதினாலும் நிறைவான கவிதைகளைத் தந்தவர;களில் ஒருவர; செந்தீரன். இஸ்லாமிய மக்களின் அடிமட்டப் பிரச்சனைகளை “விடிவு” என்னும் கவிதைத் தொகுப்பினூடாக வெளிக்கொணர;ந்த செந்தீரன் மொழி பெயர;ப்பாளராகவும் இயங்கியவர;. செந்தீரனைப் போன்று முஸ்லீம்களின் அவல வாழ்வியலைக் கவிதையாக வடித்தவர;களில் பிறிதொருவர; “ஈழத்துநூன்” எனப்படும் ‘நிலாம்’ ஆவாh;. முற்போக்குக் சிந்தனையாளரான இவரால் ‘நூன் கவிதைகள்’ என்னும் தொகுப்பும் கொண்டு வரப்பட்டது.
கவியரங்கு கவிஞராக அறியப்பட்ட அன்புடீன் மரபுக்கவிதைக்கூடாகவும் அறியப்பட்டவர;. ஓசை நயமிக்க இவரது கவிதைகளில் கருத்துக்களே மிஞ்சி நிற்கின்றன. மிகக் குறைந்தளவு கவிதைகளே இக்காலப்பகுதியில் இவரால் எழுதப்பட்டது. இவரைப் போன்று மரபுக்கவிதை, புதுக்கவிதைகளை எழுதியவராகப் பாலமுனை பாரூக் காணப்படுகிறாh;. இவர; பின்னாளில் குறும்பா முயற்சிகளிலும் ஈடுபட்டவர;.
சமய, சமூக, அரசியல், பொருளாதாரக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கவிதை படைத்தவர;களில் முக்கியமான ஒருவர; அன்புமுகைதீன் ஆவாh;. “நபிகள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மாத்திரம் சொந்தக்காரா;” என்னும் பொருள் பொதியும் வண்ணம் நபிகள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பலவற்றைக் கவிதையாகப் படைத்தாh;. அவ்வகையில் “நபிகள் வாழ்வில் நடந்த கதைகள்” (1976), “அண்ணல் நபி பிறந்தாh;” (1979) என்னும் கவிதை நூல்கள் முக்கியமானவை. இயற்பியல் வாழ்வியலுக்கூடாக பெருமானாh; நபிகள்(ஸல்) வாழ்வில் நடந்த சம்பவங்களைக் கோவையாக இக்கவிதைகள் தொகுத்து தருகின்றன. வெண்பா, அறுசீர;, எண்சீர;, விருத்தம், ஆசிரியப்பா முதலான மரபுவகை யாப்புக்களைக் கையாண்டு கவிதை பாடினாலும் தீரனின் கவிதைகள் யாவும் பாமரராலும் எளிதில் வாசித்தறியும் வண்ணம் எளிய மொழியில் உருவாக்கப்பட்ட கவிதைகள். ஏலவே தினகரன், தினபதி, வானொலி முதலானவற்றிலும் இக்கவிதைகள் வெளிவந்தனவே ஆகும்.
வடிவ, உள்ளடக்க ரீதியில் நவீன கவிதைக் கூறுகளை உள்வாங்கி 1970களில் தீவிர இலக்கியப் படைப்பாளியாகத் தன்னைப் பிரதிநிதித்துவப் படுத்தியவருள் ஒருவர; எம்.ஏ.நுஃமான் ஆவாh;. மாh;க்சிய சித்தாந்தத்துக்குட்பட்டு அரசியல் சமூகப்பிரச்சனைகள், வா;க்கமுரண்பாடுகள், சமூகஒடுக்கு முறைகள் முதலானவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு இவரெழுதிய கவிதைகள் “தாத்தாமாரும் பேரா;களும்” என்னும் தொகுப்பு 1977 இல் வெளிவந்தது. நிகழ்ச்சிக் கோவைகளின் வழி கருத்துக்களை முன்வைத்து காட்சி வைப்புகளினூடாக கருப்பொருளுக்கு உருக்கொடுக்கும் நுஃமானின் கவிதைகள் முருகையன் கூறுவது போல் ‘உயிர;ப்பும் அசைவும் கொண்டவை’.
மஹாகவி இறந்த போது புண்ணுண்ட மனதோடு நுஃமான் பாடிய சமரகவி பெருங்காயத்தின் தீராத வலியை ஆறாத்துயரோடு பகிர;கிறது.
வாழ்வு மலர; ஒன்றை
மரணம் பொசுக்கியது
வாழ்வின் மலர;
தன் மணத்தை வெளியெங்கும்
வீசி நிலைத்திருக்க விட்டு விட்டுச்
சாவென்னும்
தீயில் குளித்துத்
திடீரென் றழிந்தது காண்
ஆமாம்
மஹாகவி
என் அன்பா இறந்துவிட்டாய்
(நான் வளர;ந்த கருப்பை)
நிகழ்வாழ்வின் அர;த்தப் பொருண்மையாய் வாழ்ந்த மஹாகவியின் இறப்பு உணர;வு பு+ர;வமாய் இக்கவிதையில் பதிவு செய்யப்படுகிறது.
மஹாகவியைப் போல் நுஃமானைப் பாதித்த பிறிதொரு இழப்பு நீலாவணனுடையது. நீலாவணனுடன் தான் கொண்ட உன்னத உறவை, நட்பின் உயிர;மையால் விளங்கும் “நீலாவணன் நினைவாக” என்னும் கவிதை நுஃமானுக்கும் நீலாவணனுக்குமிடையிலான அன்பின் பரிவர;த்தனையை மிகத்துல்லியமாக எடுத்து உரைக்கிறது. “ஓ, என் கவிஞனே, ஃ நமது உறவின் பரிதியை மறைத்த ஃ கருமுகில் கும்பலைச் சிதறி அடிக்க ஃ நீ ஏன் உனது சூறாவளியினை ஃ அனுப்பவே இல்லை” என நீலவாணனை நோக்கி வினாத் தொடுக்கும் நுஃமான் ஈற்றில் தீராத தன் நெடுந்துக்கத்தை
“எனது துயரையும் பெருமூச்சினையும்
உனது நினைவின் சமாதியின் மீது
சமர;ப்பணம் செய்கிறேன்
சாந்தி கொள் அன்பனே”
என்னும் வரிகளுக்கூடாக உயிரோட்டமாய்க் காட்சிப் படுத்துகிறாh;. கூர;மையான மொழிக்கூடாக அர;த்தத்தைப் பிரவகிக்கும் கவிதையாக நுஃமான் கவிதைகள் காணப்படுகிறது.
நடப்பியல் வாழ்வை அரசியல் பின்னனிகளோடு இணைத்துக் கவிதை படைத்தவர;களில் முக்கியமானவாருள் மூதூர; முகைதீனும் ஒருவராவாh;. மரபுக்கவிதைகளோடு கவிஞனாக பிரவேசித்த முகைதீன் ‘சிரித்திரன்’ ‘மல்லிகை’க்கூடாக புதுக்கவிஞராக அறியப்பட்டாh;. ஆரம்பகால ஈழத்து புதுக்கவிதைகளில் தாக்கம் செலுத்திய வானம்பாடிக்கவிதைகளின் சாயலை மூதூர; முகைதீன் கவிதைகளிலும் காணலாம்.
இழுத்து உழைத்து
இருமல் வந்ததினால்
சேர;ந்திருந்த சில்லறைக்கு
இருபத்தைந்து சத
முத்திரை ஒட்டி
சும்மா
மருந்து வாங்கச் செல்ல
டாக்டர; எழுதுகிறாh;
இருபத்தைந்து ரூபா
விட்டமின்
(சிரித்திரன் ஆகஸ்ட் 73)
“இலவசம்” என்னும் தலைப்பில் எழுதப்பட்ட இக்கவிதை வானம்பாடிக் கவிதைகளைப் போல் இன்றைய சமூக அவலங்களை நகைச்சுவை உணர;வோடு வெளிப்படுத்துகிறது.
ஈழத்துத்தமிழிலக்கியத்தில் கொழும்பைத் தளமாகக் கொண்டு அழகியல் படிமங்களுக்கூடாகக் கவிதை பாடிய ஒருவராக அறியப்பட்டவர; மேமன் கவி ஆவாh;. 1976 இல் யுகராகங்கள் தொகுப்புக்கூடாக அறியப்பட்ட இவர; இந்திய (குஜராத்) மண்ணிலிருந்டது ஈழத்துக்கு குடிபெயந்தவர; ரஸாக்லாகானா என்னும் இயற்பெயர; கொண்ட இவர; சமூக ஏற்றத்தாழ்வுகள், வர;க்கச் சுரண்டல்கள், பொருளாதார சமவீனங்கள் முதலானவற்றைப் பாடு பொருளாகக் கொண்டு கவிதை பாடியவா;. புதுக்கவிதைக்கான முதலாவது சாஹித்ய மண்டலப்பரிசினைப் பெற்ற முஸ்லிம் கவிஞரும் இவராவார;. பேராசிரியர; கா.சிவத்தம்பி அவர;கள் கூறுவதைப்போன்று “இவருடைய மிக அந்தரங்கமான உள்ளத்தின் குமுறல்கள், போராட்டங்கள், கொந்தளிப்புக்கள் ஆள்நிலைப்பட்ட, தனிப்பட்ட மனப்போராட்டங்கள் எல்லாம் இவர; கவிதையினூடு வெளிவரவில்லை” என்பது வெளிப்படை.
சமூக நோக்கில் மிக்க நேர;த்தியான கவிதைகளுக்கு வித்திட்ட 1970கள் முற்போக்கு சிந்தாந்தங்களையும் ஆன்மீக நோக்கங்களையும் உள்வாங்கிக் கொண்டன. மரபுக்கும் புதுக்கவிதைக்கும் பாலமாக அமையும் இக்காலகட்டம் நவீன முன்னோடிக் கவிஞர;களின் ஆக்க இலக்கிய முயற்சியால் தலை நிமிர;ந்து நிற்கிறது. 1970களுக்கு பின் ஈழத்துக்கவிதை மரபிலிருந்து விலகி நவீன கவிதையான புதுக்கவிதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.