125x125 Ads

ஈழத்து தமிழ்க் கவிதைப் புலத்தில் கவிஞனின் இயங்கியலும் இருப்பும்


சி.ரமேஷ்


எம்.ஏ.நுஃமானைத் தொகுப்பாளராகக் கொண்டு 1969 பங்குனித் திங்களில் காலாண்டு கவிதை இதழாகப் பரிணமித்த கவிஞன்கலைமதிப் புடைய காத்திரமான கவிதை இதழாகத் தன்னைப் பதிவு செய்து கொண்டது. ஈழத்தின் நவீன கவிதைப் புனைவினை ஆழமாகப் பதிவு செய்த இவ்விதழ்கவிதை பற்றிய விமர்சன நோக்கை வளர்த்தெடுப்பதற்கும் சர்வதேசக் கவிதைகளின் தரத்தை மட்டிட்டுப் புரிந்துகொள்வதற்கும் கால்கோளாக அமைந்தது என லாம். வாசகர் சங்க வெளியீடாக வந்த கவிஞன் 11.09.1970இல் மஹாகவியின் கோடை என்னும் கவிதை நாடகத்தைத் தாங்கி வந்த ஐந்தாவது இதழுடன் தன்னை முடித்துக் கொண் டது. கலையாக்கத்திலும் சமூகப் பெறுமானத்திலும் வாசகர் தொகையிலும் நமது இன்றைய எல்லைகளை விரிவுபடுத்தவேண்டும் என்னும் தார்மீக நோக்கை அவாவி நின்ற கவிஞன் விரிந்து வரும் தமிழ்க்கவிதைப் பரப்பின் சகல புதிய அம்சங்களுக்குரிய பக்கச் சார்பற்ற ஒரு வெளியீட்டுக் களமாகத் தன்னைப் பிரகடனப்படுத்தி அவ்வழி இயங்கியது.
கவிதையின் அதீத வெளிப்பாட்டை அழகியலாகவும் கருத்தியலாகவும் வெளிப்படுத்திய இவ்விதழில் சண்முகம் சிவலிங்கம்எம்.ஏ.நுஃமான்முருகையன்மஹாகவிநீலாவணன்,அண்ணல்மு.பொன்னம்பலம் அ.யேசுராசாபாண்டியூரன் உள்ளிட்ட இருபத்திமூன்று கவிஞர்களின் முப்பத்தெட்டுக் கவிதைகள் வெளியாகின. இச்சஞ்சிகையில் வெளியான கவி தைகளில் மிக நீண்ட கவிதையாக எம்.ஏ.நுஃமானின் அதிமானிடன்’ (237 அடிகள்) என் னும் கவிதையும் மிகச் சிறிய கவிதையாக நாக.மகாலிங்கத்தின் போர்ப்பாட்டு’ (8 அடி) என் னும் கவிதையும் பிரசுரமாயின.
நவீன கவிதைகளின் பிரசுரத் தளமாகக் கவிஞன் வெளிவருவ தற்கு முன்னரே 1950இல் மாத இதழாக வரதரின் தேன்மொழி’ யும் 1964இல் காலாண்டிதழாக நோக்கு’ என்னும் சஞ்சிகையும் வெளிவந்திருந்தன. தேன்மொழி கவிதைத்துறைக்காற்றிய சேவை மிகவதிகம். பதினாறு பக்கங்கள் கொண்ட இவ்விதழில் ஒவ்வொரு இதழின் அட்டையிலும் சோமசுந்தரப் புலவரின் பாடலிடம் பெற்றது. இதனைப் போன்று ஒவ்வொரு இதழின் பின்னட்டையிலும் ஒரு கவி ஞர் அறிமுகப்படுத்தப்பட்டார். அ.ந.கந்தசாமி போன்றோரால் இவ் விதழில் பிறமொழிக் கவிதைகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட் டன. இலங்கையில் தமிழ்க் கவிதைகளுக்காக வெளிவந்த முதல் இதழ் என்னும் வகையில் சிறப்பித்துக் கூறப்படும் தேன்மொழி ஆறு இதழ்களுடன் நின்று போனது.
ஈழத்து நவீன கவிதையியலுக்கான அடிப்படைக் கூறுகளையும் அன்றைய தமிழ்க் கவி தையின் போக்குகளையும் இனம் காட்டிச் சென்ற தேன்மொழியைத் தொடர்ந்துஇ.இரத்தினம்இ.முருகையன் ஆகியோரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த இதழே நோக்குஆகும். இவ்விதழ் மரபு ரீதியான தமிழ்க் கவிதைகளைத் தனக்குள் அதிகளவில் உள்வாங்கிக் கொண் டதுடன் செவ்விய தமிழ்மொழியை அடியயாற்றிய பண்டிதப் போக்கிலமைந்த கவிதை இதழாக வும் தன்னை வடிவமைத்துக் கொண்டது. பிறமொழிக் கவிதைகளுக்கும் கவிதை பற்றிய பிற நாட்டவர் கருத்துக்களுக்கும் முன்னுரிமையளித்த நோக்கு; மயகோவ்ஸ்கி, கியூசினி, எவ்கு செங்கோ முதலிய சோவியத் கவிஞர்களையும் காசியா லோகா,மிகுவெல் உனாமுனோ முதலிய ஸ்பானியக் கவிஞர்களையும் பூடிலியர்க் போல்வலரி முதலான பிரான்சியக் கவிஞர் களையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியது. நான்காவது இதழை சேக்ஸ்பியர் கவிதை ஏடாகப் பிரசுரித்த நோக்குபுதுமைக்கும் பழமைக்கும் பாலமாக அமைந்தது 1970களில் வெளிவந்த இவ்விதழ் ஆறாவது இதழுடன் தன்னை முடித்துக் கொண்டது.
கவிதையைச் சமூகச் செயற்பாட்டுடன் பிரக்ஞை பூர்வமாக அணுகும் வகையில் மூன்றா வது கவிதை ஏடாக ஈழத்தில் வெளிவந்தகவிஞன்’ நவீன கவிதைச் சிற்றேடுகளான கவிதை, நிலம்யாத்ரா,தவிரநடுகைநீங்களும் எழுதலாம்மறுபாதி முதலான இதழ்களுக்கு முன் மாதிரியாகவும் அக்காலப் படைப்பிலக்கிய ஆளுமைகளுக்கிடையிலான பரிவர்த்தனைக் கள மாகவும் இயங்கியது எனலாம். கலைத்துவமிக்க நேர்த்தியான கவிதைகள் பலவற்றைத் தன் னுள் உள்ளடக்கியிருந்த கவிஞன் அழகியல் தன்மையற்ற ஆக்கபூர்வமான இதழாகவும் அமைந்தது என்னும் வகையில் ஈழத்திலக்கியத்தில் கவிஞனின் இடம் முக்கியமானது.
சமுதாயத்திலுள்ள நடப்பியல் வாழ்வையும் மக்கள் படும் அவலங்களையும் சித்திரிக்கும் கவிஞன் கவிதைகள் பாசங்கற்றவை,பவித்திரமான பாரம்பரிய நீரோட்டத்தில் கட்டுருபவை வாழ்வியல் அனுபவங்களை நடத்தைசார் மாற்றங்களுக்கூடாகப் பதிவு செய்பவை. நாம் அன் றாட வாழ்வில் நாள் தோறும் காணும் பாடசாலை வாத்தியாரையும் (பாவம் வாத்தியார்)தாயை நினைத்து நினைத்து மனம் குமையும் மகவையும் (மதிப்பீடு) ஆழ்கடலில் அழகுப் பயணம் போகும் மீனவனையும் (பயணம்),ஞாயிற்றுக்கிழமைப் பொழுதில் விடியாத இருளில் பனிப் புகார் தன்னில் இனிய துயில் கெடுக்கும் மாதா கோயில் மணியோசை கேட்டுச் சினுங்கும் மானிடப் பிறவியையும் (ஒரு ஞாயிற்றுக்கிழமை) சீர்திருத்தம் என்னும் பெயரில் நாகரிக மாயைக்குள் மூழ்கி அநாகரிகமாய் நடக்கும் ஜீவனற்ற ஆத்மாக்களையும் (சீர்திருத்தம்) கவிஞ னெங்கும் தரிசிக்கலாம். மனித வாழ்வும் அதன் உயிர்ப்பும் நிணமும் சதையுமாகக் கவிஞ னில் விரவி நிற்கிறது. தேர்ந்த சொல்லும் கட்டிறுக்கமும் கவித்துவ அழகியலும் நிறைந்த இக் கவிதைகள் புதிய பாடுபொருளுக்கூடாக இயல்பினை அவாவி நிற்கின்றன.
கவிஞன் இதழின் காத்திரத்தன்மைக்கும் அதன் நிலைபேற்றிற்கும் உள் நின்று உழைப் பினை நல்கியவர்களாக எம்.ஏ.நுஃமான்,சண்முகம் சிவலிங்கம் போன்றோரைக் கூறலாம். விரிந்த தளத்தில் நிறைந்த படைப்புகளைத் தந்தவர்களாக மஹாகவிமுருகையன்,மு.பொன் னம்பலம் முதலானவர்களையும் குறைந்த படைப்புக்களை நல்கி நிறைந்த தளத்தில் பிரவேசித் தவர்களாக அ.யேசுராசா,மருதூர்க்கொத்தன்அண்ணல்நீலாவணன்மு.சடாட்சரன்ஜீவா ஜீவரெத்தினம், தான்தோன்றிக் கவிராயர் போன்ற பலரைக் கூறலாம். இவர்களில் எம்.ஏ.நுஃ மான்சண்முகம் சிவலிங்கம் முதலானோரின் பணிகள் அதிமுக்கியமானவை. இவ்விதழின் தொகுப்பாளரான எம்.ஏ.நுஃமான் படைப்பிலக்கியவாதியாகவும் விமர்சகராகவும் பன்முகத் தளங்களில் இயங்கியதுடன் இதழின் ஸ்திரத்தன்மைக்கும் பெரும் பங்காற்றினார்.
கவிஞனில் நான்கு கவிதைகளையும் இரண்டு விமர்சனங்களையும் எழுதிய நுஃமான்ஐந்தாவது இதழில் மஹாகவியின் கோடைக்கு ஓர் அறிமுகமும் செய்திருந்தார். மனிதர்க ளின் உணர்வுநிலை உந்துதல்களை கலை வனப்புடன் சூழலுக்கேற்ப இலக்கியப் படைப்புக்க ளாக மாற்றி அமைத்தோருள் முக்கியமானவராகக் குறிப்பிடப்படும் நுஃமான்ஆழ்பொருள் கொண்ட உணர்வாழமிக்க கவிதைகளைக் கவிஞன் இதழில் படைத்துள்ளார். இசைத்துத் தெளிவாக / மினுக்கி மினுக்கி / விதித்து மதர்த்த அழகோடு/ உணர்ச்சிப் பெருக்கில் / நனைத் துப் பிழிந்த கவியாகும்.” என்னும் நீலாவணன் வாக்குக்கமைய நுஃமானால் எழுதப்பட்ட இக்கவிதைகள் ஓசை ஒருங்குடன் வாழ்வின் அநுபவ நிலைகளை காட்சிப்படுத்துபவையாக அமைகின்றன.
மனித வாழ்வின் பரிணாம வளர்ச்சியைச் சித்திரிக்கும் நுஃமானின்அதிமானிடன் வாழ் வியல் போராட்டங்களுக்கூடாக மனிதன் அடைந்த அதி உன்னத நிலையை எடுத்துரைக்கிறது. அடர்ந்த காட்டில் இருட்குகையுள் பரட்டைத் தலையுடன் பிறந்த மேனியாய் மாசிசம் புசிக்கும் ஆரம்ப கால மனிதன்காலமாறுதலுக்கேற்ப மனித நடத்தைசார் வாழ்வியலை உள்வாங்கி படிப்படியாக வளர்ச்சியடைந்து உலகை ஒரு கைப்பிடிக்குள் அடக்கி விண்வெளியைக் கடந்து கோளவெளிக்குள் பிரவேசிக்கும் மனிதனாக மாறுகிறான்என்பதை விளக்கி நிற்கின்றார். சமூகப்புறப்பெருண்மைக் கூடாகக் காட்சிப்படுத்துகிறார். இக்கவிதை ராகுல்சாங் கிருத்தியனின் வால்கா முதல் கங்கை வரை என்னும் நூலின் தொடர்ச்சியாகவும் முருகையனின் ஆதி பகவன் என்னும் கவிதையின் முன்மாதிரியாகவும் கொள்ளப்படுகிறது.
புகையிரநிலையத்தில் அல்லலுறும் பயணியின் மன அவஸ் தைகளைத் துல்லியமாகப் பதிவுசெய்யும் புகைவண்டிக்காக காத்தி ருக்கையில்” என்னும் கவிதை விவரண முறையியலுக்கூடாகத் தன்னை வெளிப்படுத்த நுஃமானின் மீண்டும் துப்பாக்கி வெடிக் கிறது என்னும் கவிதை நிகழ்வொன்றின் நிஜத்தை காட்சிப் படிமங் களுக்கூடாக எடுத்துரைக்கிறது. மஹோசிமின்டு நினைவாக எழுதப் பட்ட இக்கவிதை அக்கால தமிழிலக்கியத்தில் வெளிப்பாட்டு முறை யாக புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பிற்கால ஈழத்தின் போர்க் கவிதைகளுக்கு முன்னோடிக் கவிதையாக அமையும் இக்கவிதை இறுக்கமான மரபுக் கவிதையாக அன்றி எளிமையான சொற் சேர்க்கையால் உருவான யாப்பு வழிக் கவிதையாக இயங்குகிறது.
பொதுவுடமைச் சித்தாந்தத்தின் மீது நம்பிக்கையையும் புரட் சியை வரவேற்பதில் ஆர்வமும் கொண்ட கால கட்டத்தில் கவிஞன்முகிழ்ந்தமையால் அது மாக்சியச் சித்தாந்தக் கருத்துக்களுடன் இசைந்த கவிதைகளையும் சுவீகரித்துக் கொண்டது. இவ்வகையில் ரஷ்சியக்கவி மஅன்றைய ஊறென்ஸ்கிடுயின் கவிதை கள் இரண்டினை இலையுதிர்காலம்’, ‘பனிப்புகார் வீதி’ என்னும் தலைப்பிட்டு தமிழுக்கு மொழிபெயர்த்த சசி என்னும் சண்முகம் சிவலிங்கம் இதனைப் போன்று லூர்ச்-சீஃபு-சூ போன்றோரின் கவிதைகளை முறையே சாங்கிங்நகர்ப் படகுகள்’ ‘மாடுகள் ஓட்டும் பெண்’ என்னும் தலைப்புக்களில் மொழி பெயர்த்தார் மொழிபெயர்ப்பைப் போன்று கவிஞனில் வெளி வந்த கவிதைகள் சில இயக்கவியல்பொருள் முதல்வாத அடிப்படையில் சுரண்டலையும் சுரண்டலுக்கெதிரான புரட்சியையும் வெளிப்படுத்தி நின்றன. நுஃமானின் நாங்கள் கோபமுற் றெழும்போது உன் வதனத்தில் புன்னகை மலர்க” என்னும் கவிதை இதற்குத்தக்க சான்றாக அமைகின்றது. வர்க்கச் சுரண்டலும் சுரண்டலால் நலிந்து நொடியும் தொழிலாளர் வாழ்வும் இக்கவிதையில் மிக நுட்பமாகப் பதிவு செய்யப்படுகிறது. வர்க்கப் போராட்டத்தின் ஈற்றில் புரட் சித்தீ கொளுந்து விட்டெரியும் என்பதை நிகரமை இயல்பு நவிற்சிக்கூடாக இக்கவிதையில் நுஃமான் எடுத்துரைப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கவிஞன் பிரசவித்த மிக நல்ல கவிதைகளில் ஒன்று அ.யேசுராசாவின் நல்லம்மாவின் நெருப்புச்சட்டி வறுமையும் வறுமைக்குள் உழலும் நல்லம்மாவின் வாழ்வும் யதார்த்தமாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. பற்றியயரி சிரட்டைத்தணல் கரிபற்ற,தணல் நிறைந்த நெருப்புச் சட்டிகள் வீசுகிற பெருவெக்கை” என்னும் வரிகளுக்கூடாகப் பிரவகிக்கும் வெக்கை நல்லம் மாவை மட்டும் தாக்காமல் அதனை உள்வாங்கும் வாசகனையும் தாக்குகிறது. இதனைப் போலவே வறுமையை வெளிப்படுத்தும் சி.மெளனகுருவின் நிலவே உன்னைப்பாட நேர மில்லை என்னும் கவிதை செறிவான வசனத்தன்மையற்று முறையான வடிவமின்றி அலங் கார வார்த்தைகளாகவேயுள்ளது. வளிபோன டயர்போல / மடிகின்ற வயிறும் / சளிவழியும் மூக்கோடு / உணர்வற்ற நிலையும்” எனக்கூறி வறுமைக்குள் உழலும் மனித விம்பத்தை சி.மெளனகுரு காட்டும்போது அதில் உயிர்ப்பில்லைஉணர்வில்லை நீர்த்துப்போன அலங்கா ரமே எஞ்சி நிற்கிறது.
ஜீவனை அரித்து வாழ்வை முடக்கும் வறுமையின் கொடுமைஜீவா ஜீவரத்தினத்தின் உன்னைப்போல் நானும் ஒரு முறை சாகவேணும் என்னும் கவிதையில் அங்கதமாய் மிளிர்கிறது.கச்சைதான் கட்டுதற்கும் / கால்முழத் துண்டுமின்றி / எச்சிலைப் பொறுக்கி வாழ்ந்தோம்” என வறுமைக்குள் உழன்று நொடிந்து வாழும் யதார்த்த நிலையைக் காட்சிப் படுத்திய கவிஞர் பிணக்கோலம் ஒன்றினாலேயே கந்தல் வாழ்வும் நளினமாகும் என்பதை வாலாமணி வெள்ளை வேட்டிச் சால்வை / நேர்த்தியாய் உடுத்தியுள்ளார் / நீ புதுமாப்பிள்ளை தானே / ..... இந்த நாள் ஒன்றே வாழ்வின் இனிமையை நுகர்கின்றாய்” என்னும் வரிகளுக் கூடாக நுட்பமாகத் தீட்டுகின்றார். இருக்கும்போது எளிமையாக வாழ்பவனை ஏறெடுத்துப் பாராச் சமூகம் இறந்த பிறகு அவனை ஏத்திப் போற்றுவதில் அர்த்தமில்லை என்பதை இக் கவிதை நன்கெடுத்துரைக்கிறது.
சண்முகம் சிவலிங்கத்தின் ஆக்காண்டி” , “சந்தியிலே நிற்கிறேன்என்னும் கவிதைக ளில் வறுமை புறக்காட்சிக்கூடாக நிலைபெறுகிறது. ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கே முட்டை வைத்தாய் என்னும் நாட்டார் பாடலடி சண்முகம் சிவலிங்கத்தின் கரங்களில் உழைப் பாளியின் உதிரத்தைப் பாடும் கவிதையாய் உருக்கொள்கிறது. உழைப்புக்கேற்ப ஊதியமின் மையால் தொழிலாளியின் மெய்வருத்தம் கடலிலே கண்டதெல்லாம் / கைக்கு வரவில்லை / வயலிலே கண்டதெல்லாம் / மடிக்கு வரவில்லை” என்னும் வரிகளில் மிகையற்று வெளிப் படுகிறது. வாழ்வின் பஞ்சம் என்றைக்கும் தீராது என்பதை குஞ்சு பசியோடு / கூட்டில் கிடந்த தென்று / இன்னும் இரை தேடி / ஏழுலுலகும் சுற்றி வந்தேன்” என்று புலக்காட்சிப் படிமங்களுக் கூடாகச் சித்திரிக்கும் சண்முகம் சிவலிங்கம் உழைப்பாளி பொங்கி எழுவதாலோ பொல் லாங்கு பேசுவதாலோ எவ்வித பயனும் இல்லை என்பதை வாழ்வின் நிதர்சனங்களுக்கூடா கவே எடுத்துரைக்கிறார்.
இராமாயணம்இரகுவம்சம் ஆகிய நூல்களில் மாத்திரமன்றி வெள்ளைக்கால் சுப்பிர மணிய முதலியார் (அகலிகை வெண்பா),ஞானி (அகலிகை)ச.து.சுப்பிரமணிய யோகியார் (அகலியா),ந.பிச்சமூர்த்தி (உயிர் மகள்)புதுமைப் பித்தன் (அகல்யை,சாபவிமோசனம்)க.கைலாசபதி (அகலிகையும் கற்பு நெறியும்) முதலானோரால் எடுத்துரைக்கப்பெற்ற அக லிகை கவிஞன் முதலாவது இதழில் மஹாகவியாலும் பாடப்படுகிறது. அறுசீர் விருத்தமாக அமையும் இக்கவிதை பதினாறு பாடல்களையுடையது. இந்திரனை அறியாது சோரம்போன அகலிகை அதனை அறிந்த கணத்திலேயே கல்லாய்ச் சமைந்தாள் என மஹாகவி காட்சிப் படுத்துவது தூல சிந்தனையின் யதார்த்த வெளிப்பாடே. அகலிகை என்னும் தொன்மத்துக்கு புதிய வடிவம் கொடுத்த மஹாகவியின் இக்கவிதை தனித்துவமானது தார்மீகக் கண் கொண்டு நோக்கத்தக்கது.
சாதியத்தின் பெயரால் ஈழத்தில் ஒடுக்கப்பட்டவரின் வாழ்வியல்இலக்கியமாகப் பரிண மித்த சூழலில் கவிஞன் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலைக் குருதி சொட்டச் சொட்ட இலக் கியமாகப் படைத்தது. அவ்வகையில் கவிஞன் இதழ் மூன்றில் வெளியான தேரும் திங்க ளும்” இ.சிவானந்தனின் கொழும்பிலொரு கோலம் சிவலோகமானாலும் என்னும் கவி தைகள் குறிப்பிடத்தக்கன. கட்புலப் படிமங்களுக்கூடாகச் சாதியக் கொடுமைகளை வெளிப் படுத்தும் இவ்விரு கவிதைகளும் வாழ்வியல் அனுபவங்களுக்கூடான மீநிலையில் எழுகின் றன. இறை சந்நிதியில் சாதியத்தின் பெயரால் நடந்த குரூரப் படுகொலையை முன்னைய கவிதை பதிவுசெய்ய பின்னைய கவிதை இலங்கையின் கல்விச் சீர்திருத்தத்தால் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் மேம்பாட்டையும் அதனைக் காணச் சகியாது புளுங்கி மாயும் மேட்டிமைகளின் மன உணர்வையும் பிரதிபலிக்கிறது. அப்பட்டமான வாழ்வியலின் அனுபவமாக முகிழும் இக்கவிதை யாழ் சமூகத்தின் பண்பாட்டுச் சிந்தனைகளுக் கூடாகத் தன்னை முன்னிறுத்துகிறது.
காதல் வயப்பட்ட அக அனுபவ உலகைப்பாடும் கவிதைகளுக்கும் கவிஞன் களம் அமைத்துக் கொடுத்தது. ஜீவா ஜீவரத்தினத்தின்பக்க பேதம் பளீல் காரியப்பரின் உயிர்ப்பு அன்பு முகையதீனின்ஒரு கணநேரச் சந்திப்பு” முதலான கவிதைகள் இவ் வகைக்குள் உள்ளடங்குபவை. பெண்ணை மையப்படுத்தி நிற்கும் இக்கவிதைகள் அழகியல் தன்மையற்றவை துலக்கமான மொழிக்கூடான நுண்ணுணர்வின் வெளிப்பாடே இக்கவிதை கள் எனலாம்.
கவிஞன் இதழில் வெளியான நுஃமான்சண்முகம் சிவலிங்கத்தின் கட்டுரைகள் ஈழத்து தமிழிலக்கியப் பரப்பில் நவீன கவிதைகளைப் புரிந்து கொள்வதற்கும் விமரிசன ரீதியாக அதனை அறிந்து அணுகிக் கொள்வதற்கும் உதவுகின்றன. நுஃமானின்பேச்சுமொழியும் கவிதையும்”, “கவியரங்கு கவிதைகள்” முதலான கட்டுரைகளும் சண்முகம் சிவலிங்கத்தின் இன்றைய தமிழ்க் கவிதை பற்றிச் சில அவதானங்கள்” என்னும் தொடர் கட்டுரையும் அஞ் சிறைத்தும்பியின் மமகோபுரவாசல் பற்றிய குறிப்புடுடு முதலானவையும் கவிஞன் இதழில் வெளி வந்தன. திறனாய்வுக் கட்டுரைகள்” “மொழியும் இலக்கியமும்” என்னும் நூல்களில் பின்னா ளில் மீள்பிரசுரம் செய்யப்பட்ட பேச்சு மொழியும் கவிதையும்என்னும் கட்டுரை கவிதையில் பேச்சொலியின் முக்கியத்துவத்தை அவாவி நிற்கிறது. இக்கட்டுரை முருகையனின் பேச்சோ சையும் பாட்டோசையும்” என்னும் கட்டுரையுடன் ஒப்பிட்டு நோக்கி ஆராயத்தக்கது. நுஃமா னின் பிறிதொரு கட்டுரையான கவியரங்குக் கவிதைகள்” கவியரங்கக் கவிதைகளின் இயங்கு தளத்தையும் அதன் படைப்பிலக்கிய ஆளுமைகளையும் தமிழிலக்கியத்துக்கு அறி முகம் செய்கிறது.
கவிஞன் மூன்றாவது நான்காவது இதழில் தொடர் கட்டுரையாகப் பிரசுரிக்கப்பட்ட இன் றைய தமிழ்க் கவிதை பற்றிச் சில அவதானங்கள்” என்னும் கட்டுரை 1970களுக்கு முன் வந்த நவீன கவிதையின் இயங்கியல் தளத்தைப் புரிந்து கொள்வதற்கு ஆரம்ப புள்ளியாக அமைந்தது. பொதுமக்களிடையே கவிதைக்கு மதிப்பில்லை எனக்கூறி கவிதைப் பிரச்சினை களை ஆராயும் இக்கட்டுரைகவிதை எழுதப்படும் நோக்கை நான்காக வகைப்படுத்தி ஆராய் வதுடன் வாழ்நிலை அடியாகப் பிறக்கும் கவிதைகளின் பிரதான கூறுகளையும் ஆராய்கிறது.
கவிதை கட்டுரை எனப் பன்முக பரிமாணங்களில் இயங்கிய கவிஞன் மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் முக்கிய பங்காற்றியது. சமகால வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்ற மேலைத் தேய கீழைத்தேய கவிதை மொழி பெயர்ப்புக்களை வாசகருக்கு அறிமுகம் செய்த கவிஞன் நிகழ்கால நன்மை கருதி ரஷ்´ய சீன ஜேர்மனிய ஆங்கிலக் கவிதைகளையே தமிழில் மொழி பெயர்த்தது. கவிஞன் முதல் இதழில் ஹன்ஸ் மாக்னஸ் என்கன்ஸ்பேகர் எழுதிய மூன்று புதிய கவிதைகள் தூரத்துவீடு”, “பட்டோலை”, “வரலாற்றுப் போக்குஎன்னும் தலைப்பின் கீழ் மொழிபெயர்க்கப்பட்டதைப் போன்று இரண்டாம் மூன்றாம் இதழில் சசி என் னும் பெயரில் சண்முகம் சிவலிங்கத்தால் ரஷ்´ய சீனக் கவிதைகளும் மொழிபெயர்க்கப்பட் டன. சண்முகம் சிவலிங்கத்தால் நான்காவது இதழில் மொழி பெயர்க்கப்பட்ட எட்கார் லீ மான்ற் றேஸ்அமிலோவல்கார்ல் சேன்பேர்க், வோல்ற் விற்மன் ஆகியோரின் நான்கு அமெரிக்க கவிதைகளும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. உரைச் செம்மையுடன் சொற்சிக்கனத் தோடு மொழிபெயர்க்கப்பட்ட சண்முகம் சிவலிங்கத்தின் கவிதையைப் போன்றுயாப்பிலக் கணத்தோடு மொழிச் செம்மையும் இயைந்து வரும் வண்ணம் மஹாகவியால் முழங்கால்” என்னும் தலைப்பின் கீழ் ஜேர்மன் கவிதை ஒன்றும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. மேலைத் தேய நவீன கவிதை இயங்கியலை அறியும் வகையில் மொழிபெயர்க்கப்பட்ட இக்கவிதைகள் தமிழிலக்கியப் பரப்பை சீர்மைப்படுத்தி விரிவுபடுத்த உதவின.
ஈழத்துத் தமிழிலக்கியச் சூழலில் நவீன கவிதைகளின் பிரசுரக் களமாகவும் கவிதை பற் றிய முறைமையான விமர்சனதளமாகவும் விளங்கிய கவிஞன்” அற்ப ஆயுளில் தன்னை முடித்துக் கொண்டது. நவீன இலக்கிய வளர்ச்சிக்கான பிற்புலத்தில் காத்திரமான படைப்புக் கூடாகப் பிரக்ஞைபூர்வமான படைப்பிலக்கிய ஆளுமைகளை ஈழத்து தமிழிலக்கியத்துக்கு அறிமுகப்படுத்திய கவிஞன்” எடுத்த நோக்குக்கேற்ப கவிதையைக் கலைத்தரமிக்க சமூக பெறுமானம் உடையதாக ஆக்கியது. யதார்த்த கவிதை இலக்கிய உருவாக்கத்துக்கான முக் கிய ஊற்றாகச் சுரக்கத் தொடங்கிய இவ்விதழ் தமிழிலக்கியப் புலத்தில் புதுமைமுற்போக்குஅழகியல் அம்சங்களுக்கூடாக கலைத்துவ மிக்க காலத்தால் அழியாத இதழாகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டது.

0 comments:

Post a Comment

 

Copyright © 2010 • அகமுகம் • Design by Dzignine